»   »  தனுஷின் கொடி... லைகாவின் விளக்கம்!

தனுஷின் கொடி... லைகாவின் விளக்கம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தனுஷின் கொடி படத்தை நாங்கள் வெளியிடவில்லை என லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

எதிர்நீச்சல், காக்கிசட்டை ஆகிய படங்களை இயக்கிய துரை செந்தில் குமார், அடுத்து இயக்கும் படம் கொடி. இதில் தனுஷ் நாயகனாக நடிக்கிறார். பிரேமம் மலையாளப் படத்தில் நடித்த அனுபமா கதாநாயகியாக நடித்துள்ளார்.


Lyca's explanation on Dhanush's Kodi

படம் முடிந்து வெளியீட்டுக்குத் தயாராக உள்ள நிலையில், இப்படத்தை லைகா நிறுவனம் வெளியிடுவதாகச் தகவல் வெளியானது. இதன் அடிப்படையில் செய்திகளும் வெளியாகின.


இதை இப்போது லைகா நிறுவனம் மறுத்துள்ளது.


கொடி படத்துக்கும் லைகாவுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. நாங்கள் திரையரங்கு உரிமையைப் பெறவில்லை என்று லைகா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.


Lyca's explanation on Dhanush's Kodi

வெற்றிவேல், எனக்கு இன்னொரு பேரு இருக்கு, யமன், ராஜீவ் குமார் இயக்கும் கமல் படம் அக்ஷய் நடிக்கும் இந்திப் படம், ஒரு தெலுங்குப் படம் மற்றும் ரஜினி நடிப்பில் ஷங்கரின் 2.0 ஆகியவைதான் இப்போது லைகாவின் கையில் உள்ள படங்கள் என்று குறிப்பிட்டுள்ளனர்.

English summary
Lyca productions has denied reports on their deal with Dhanush starring Kodi distribution.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil