»   »  ரஜினியுடன் 2.ஓ தயாரிப்பாளர் லைகா சுபாஷ்கரன் சந்திப்பு!

ரஜினியுடன் 2.ஓ தயாரிப்பாளர் லைகா சுபாஷ்கரன் சந்திப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரஜினி இரண்டு வேடங்களில் நடித்து வரும் இந்தியாவின் மிகப் பிரமாண்ட படமான 2.ஓ தயாரிப்பாளர் லைகா சுபாஷ்கரன் நேற்று ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்தார்.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்ஷய் குமார், எமி ஜாக்சன் நடித்து வரும் படம் 2.ஓ. ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தின் 50 சதவீத படப்பிடிப்பு கடந்த மே மாதம் முடிந்தது. அதன் பிறகு இரண்டு மாதங்கள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தொடங்கியுள்ளது. இதில் ரஜினி சம்பந்தப்படாத காட்சிகள் மட்டும் படமாக்கப்பட்டு வருகின்றன.

Lyca Subashkaran meets Rajinikanth

முற்றிலும் 3 டி படமாக உருவாகிறது 2.ஓ.

ரஜினி தனது ஓய்வை முடித்துக் கொண்டு விரைவில் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருக்கிறார்.

இந்த சூழலில் நேற்று 2.ஓ படத் தயாரிப்பாளர் லைகா சுபாஷ்கரன் சென்னை வந்தார். ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். அவருடன் லைகா நிறுவன கிரியேடிவ் ஹெட் ராஜு மகாலிங்கமும் இருந்தார்.

English summary
Lyca productions Subashkaran Alliraja has met superstar Rajinikanth at his residence.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil