»   »  'நெருப்புடா...'வுடன் மோதும் பாடலாசிரியர் ஏக்நாத்தின் 'நூறு சாமிகள்...' பாட்டு!

'நெருப்புடா...'வுடன் மோதும் பாடலாசிரியர் ஏக்நாத்தின் 'நூறு சாமிகள்...' பாட்டு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

விஜய் ஆன்டனியின் பிச்சைக்காரன் படத்தில் இடம்பெற்றுள்ள சூப்பர் ஹிட் பாட்டு 'நூறு சாமிகள் இருந்தாலும்....' பாடல் இன்னமும் கூட பலரது காலர் ட்யூனாக மனதை இதமாக்கிக் கொண்டுள்ளது.

இந்தப் பாடலுக்கு இப்போது மேலும் ஒரு புதிய அங்கீகாரம் கிடைத்துள்ளது.

Lyricist Egnath's song in IIFA nomination

இந்திய சர்வதேச திரைப்பட விழா விருதுகளுக்கான பரிந்துரைகளில் இந்தப் பாடலும் இடம்பெற்றுள்ளது.

இந்தப் பாடலுடன் போட்டியிடும் மற்ற பாடல்கள்:

நெருப்புடா நெருங்குடா... (அருண்ராஜா காமராஜ் - கபாலி)

இது கதையா... (பார்த்தி பாஸ்கர் - சென்னை 28 II)

தள்ளிப் போகாதே (அச்சம் என்பது மடமையடா), நீயும் நானும்.. (நானும் ரவுடிதான்) - கவிஞர் தாமரை.

பாடலாசிரியர் ஏக்நாத் இதற்கு முன் ஏராளமான பாடல்களை, பல முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் எழுதியுள்ளார்.

Lyricist Egnath's song in IIFA nomination

நீயும் நானும்... (மைனா)
கண்ணிரெண்டில் மோதி நான் விழுந்தேனே... (உத்தமபுத்திரன்)
குக்குறுகுக்குறு... (ஒரு ஊர்ல ரெண்டு ராஜா)
யாரோ யாரோ... (மீகாமன்)
தேகம் தாக்கும்... (புறம்போக்கு)

போன்ற பாடல்கள் இவரது படைப்பில் வெளியான சிறந்த பாடல்களுக்கான சில சேம்பிள்கள்.

முன்னணி இசையமைப்பாளர்களின் படங்களில் தொடர்ந்து பாடல்கள் எழுதி வருகிறார்.

English summary
Lyricist Egnath's song Nooru Saamigal... from Vijay Antony's Pichaikkaran movie has got a nomination in IIFA nomination under best lyric category.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil