twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    “பம்பா பாக்யாவின் குரலில் அவ்ளோ ஆதங்கம் இருந்தது”: பொன்னியின் செல்வன் பாடலாசிரியர் உருக்கம்

    |

    சென்னை: பிரபல பின்னணிப் பாடகர் பம்பா பாக்யா மாரடைப்பு காரணமாக நேற்றிரவு உயிரிழந்தார்.

    ஏ.ஆர். ரஹ்மான் இசையில் பல பாடல்களைப் பாடி ரசிகர்களிடம் கவனம் ஈர்த்தவர் பம்பா பாக்யா.

    பம்பா பாக்யாவின் மறைவுக்கு பொன்னியின் செல்வன் பாடலாசிரியர் இளங்கோ கிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளார். .

    2009 முதல் 2014 திரைப்பட, சின்ன திரை விருதுகள்... சென்னையில் செப்.4ம் தேதி விருது வழங்கும் விழா2009 முதல் 2014 திரைப்பட, சின்ன திரை விருதுகள்... சென்னையில் செப்.4ம் தேதி விருது வழங்கும் விழா

    பின்னணி பாடகராக பம்பா பாக்யா

    பின்னணி பாடகராக பம்பா பாக்யா

    வித்தியாசமான குரலுக்குச் சொந்தக்காரரான பம்பா பாக்யா, பல வருடங்களாக ஏ.ஆர். ரஹ்மானின் அணியில் குழுப் பாடகாராக பணியாற்றி வந்தார். மேலும், தனியாக பக்திப் பாடல்கள், ஆல்பங்களிலும் பாடி வந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், மணிரத்னம் இயக்கிய ராவணன் படத்தில் "'கெடா கெடா கறி" என்ற பாடலில் பென்னி தயாள் உள்ளிட்ட ரஹ்மான் குழுவினரோடு சின்ன பகுதியை பாடி அசத்தியிருந்தார்.

    ரஹ்மானின் ஆஸ்தான பாடகர்

    ரஹ்மானின் ஆஸ்தான பாடகர்

    இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் ஆஸ்தான பாடகராக வலம் வந்த பம்பா பாக்யா, 2.O படத்தில் இடம்பெற்ற 'புள்ளினங்கால்' பாடலை மனோ, ஏ.ஆர். அமீன் ஆகியோருடன் இணைந்து பாடியுள்ளார். இதனைத் தொடர்ந்து விஜய் நடித்த சர்கார் படத்தில் இடம்பெற்ற 'சிம்டாங்காரன்' பாடலை தனது ரகளையான குரலில் பாடி அமர்க்களம் செய்திருந்தார். இந்தப் பாடல், சூப்பர் ஹிட் அடித்ததோடு, பம்பா பாக்யாவுக்கும் மிகப் பெரிய அடையாளத்தைக் கொடுத்தது.

    இறுதி பாடலான பொன்னி நதி

    இறுதி பாடலான பொன்னி நதி

    ரஹ்மானின் குழுவில் நிரந்தரமான இடம் பம்பா பாக்யாவுக்கு இருந்தது. தொடர்ந்து அவரது இசையில் பிகில் படத்திற்காக 'காலமே காலமே', சர்வம் தாள மயம் படத்தில் 'டிங் டாங்', இரவின் நிழல் படத்தில் 'பேஜாரா' போன்ற பாடல்களைப் பாடியுள்ளார். அதேபோல், 'பாகுபலி' படத்தில் இவர் பாடிய "வந்தாய் ஐய்யா வந்தாய் ஐய்யா" என்ற பாடல் ரொம்ப பிரபலமானது. இந்நிலையில், பம்பா பாக்யாவின் கடைசிப் பாடலாக 'பொன்னியின் செல்வன்' படத்தில் இடம்பெற்றுள்ள 'பொன்னி நதி' பாடல் அமைந்துள்ளது. அந்தப் பாடலே பம்பா பாக்யாவின் குரலில் தான் ஆரம்பிக்கும்.

    பம்பா பாக்யாவின் ஆதங்கம்

    'பொன்னி நதி' பாடலில் "காவிரியாய் நீர்மடிக்கு' என முதல் தொகையறாவை உச்சஸ்தாயில் பாடி பிரமிக்க வைத்திருப்பார் பம்பா பாக்யா. இந்நிலையில், பம்பா பாக்யாவின் மறைவுக்கு 'பொன்னி நதி' பாடலை எழுதிய பாடலாசிரியர் இளங்கோ கிருஷ்ணன் தனது முகநூல் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், சில தினங்களுக்கு முன்னர் என்னிடம் செல்போனில் பேசிய பம்பா பாக்யா, "பொன்னி நதி பாடலில் அந்த முதல் தொகையறா முழுக்க நான் தான் பாடினேன் சார். பிற்பாடு, ரெஹ்னா மேடம் பாடினது வந்திடுச்சு" என சொன்னதாகவும், அப்போது அவரது குரலில் அவ்வளவு ஆதங்கம் இருந்ததாக தெரிவித்துள்ளார். மேலும், "என் பாட்டை முதலில் உலகுக்குச் சொன்னது உங்கள் குரல். என்றும் என் நினைவில் இருப்பீர்கள். போய் வாருங்கள் பாக்யா சார்... :((" எனவும் இளங்கோ கிருஷ்ணன் பதிவிட்டுள்ளார்.

    பாடலாசிரியர்கள் இரங்கல்

    இந்நிலையில், பம்பா பாக்யாவின் மறைவுக்கு திரையுலகினரும் ரசிகர்களும் தொடர்ந்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகர்கள் கார்த்தி, ஷாந்தனு, பாடலாசிரியர்கள் அருண் பாரதி, அ.ப. ராசா உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். பொன்னியின் செல்வன் படத்திற்காக முதல் பாடலான பொன்னி நதியை ரசிகர்களுக்கு கொண்டு சேர்ந்தவர், அவரது மறைவை ஏற்க முடியவில்லை என ரசிகர்களும் பதிவிட்டு வருகின்றனர்.

    English summary
    Lyricist Ilango Krishnan condoled the demise of Bamba Bakiya
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X