கஞ்சாப்பூ கண்ணால பாடல் சர்ச்சை..பகிரங்மாக மன்னிப்பு கேட்ட பிரபலம் !
சென்னை : கஞ்சாப்பூ கண்ணால பாடல் சர்ச்சைக்கு விருமன் பிரபலம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார்.
Recommended Video
முத்தையா இயக்கத்தில் கார்த்தி, அதிதி சங்கர் நடித்துள்ள திரைப்படம் விருமன். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்தில் பிரகாஷ் ராஜ், சூரி, கருணாஸ், ராஜ்கிரண், வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
2டி என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் கடந்த வாரம் தமிழகம் முழுவதும் 475 திரைகளில் வெளியானது.

விருமன்
நடிகர் கார்த்தி இயக்குனர் முத்தையா கூட்டணியில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான கொம்பன் திரைப்படம் மாபெரும் வெற்றியை ருசித்தது. அந்த வெற்றிக்கூட்டணி 7 ஆண்டுகளுக்கு பின் தற்போது மீண்டும் இணைந்துள்ள படம் தான் விருமன். கார்த்தி நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் எதார்த்தமான நடிபை வெளிப்படுத்தி மக்கள் மனதில் இடம்பிடித்துவிட்டார்.

கலவையான விமர்சனம்
கலவையான விமர்சனங்களைப் பெற்ற இப்படம், முதல் நாளில் ரூ.8.20 கோடி ரூபாய் வசூலை ஈட்டியது. இரண்டாம் நாளான சனிக்கிழமை ரூ.8.45 கோடியை வசூலித்தது. அதன்படி படம் வெளியான இரண்டு நாட்களில் மொத்தம் ரூ.16.65 கோடி ரூபாயை படம் வசூலித்துள்ளது. இன்றும் நாளையும் விடுமுறை தினம் என்பதால் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கலாம் என சினிமா வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

சர்ச்சை
விருமன் படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களுக்கும் நல்ல வரவேற்றை பெற்ற வரும் நிலையில், இத்திரைப்படத்தில் இடம்பெற்ற கஞ்சாப்பூ கண்ணால என்ற பாடல் நல்ல வரவேற்பை பெற்றாலும், நெட்டிசன்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இளைஞர்களும் தற்போது போதை பழக்கத்திற்கு அடிமையாக வரும் நிலையில் கஞ்சாவை முன்னிலைப்படுத்தி பாடல் வரிகள் இடம்பெறுவது நியாயமா என்று கேட்டு கண்டனத்தை தெரிவித்தனர்.

பகிரங்க மன்னிப்பு
இந்நிலையில், இந்த பாடல் குறித்து விளக்கமளித்த பாடலாசிரியர் மணிமாறன், கஞ்சாப்பூ பாடல் வரிகளுக்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்றும் ஆனால் அதே நேரத்தில் மயக்கம் தன்மைக்காக பெண்களை கஞ்சா பூவுடன் ஒப்பிட்டதாகவும் கஞ்சாவுடன் ஒப்பிடவில்லை என்றும் அவர் தெரிவித்தார். இருப்பினும் தன்னுடைய வார்த்தைகள் தவறானது தான் என்பதை ஒப்புக் கொள்கிறேன் என்றும் அதற்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











