Snegan Father: பாடலாசிரியர் சினேகனின் 102 வயது தந்தை உயிரிழந்தார்.. அதிகாலையில் உயிர் பிரிந்தது!
சென்னை: பாடலாசிரியர் சினேகன் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத பாடலாசிரியராக இருக்கிறார். இவரின் தந்தை தந்தை சிவசங்கு இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 102. அவரின் மறைவு அவரின் குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
பள்ளியில் படிக்கும் போதே கவிதை எழுதுவதில் ஆர்வம் கொண்டவராக இருந்த சினேகன், சென்னைக்கு வந்து, பாடலாசிரியரும், கவிஞருமான வைரமுத்துவிடம் 5 ஆண்டுகள் உதவியாளராக பணியாற்றினார். அதைத் தொடர்ந்து கே. பாலச்சந்தர் இயக்கிய புத்தம் புது பூவே படத்தில் எஸ்.ஏ.ராஜ்குமார் இசையில் முதல் பாடலை எழுதினார். அதைத்தொடர்ந்து பல திரைப்படங்களுக்கு இவர் பாடல் எழுதி உள்ளார்.
பாண்டவர் பூமி' படத்திற்காக சினேகன் எழுதிய தோழா தோழா பாடல் அனைவருக்கும் பிடித்தமான பாடலாகும். சுமார் 70க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு மேல் பாடல் எழுதி தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத பாடல் ஆசிரியராக இருக்கிறார்.

பாடலாசிரியர் சினேகன்: நடிகர் கமல்ஹாசன் மீது அதீத பற்று கொண்ட சினேகன் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின், மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கிய போது அக்கட்சியில் இணைந்து தேர்தலில் போட்டியிட்டார். அதுமட்டுமில்லாமல் தனது நீண்ட நாள் காதலியான சீரியல் நடிகை கன்னிகா ரவியை, கமல் முன்னிலையில், அவர் தாலி எடுத்துக்கொடுக்க திருமணம் செய்து கொண்டார். கடந்த ஜனவரி மாதம் இவர்களுக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்த போதும், நடிகர் கமல்ஹாசனே காதல், கவிதை என பெயர் வைத்தார்.
அதிகாலை உயிர் பிரிந்தது: இந்நிலையில் சினேகனின் தந்தை சிவசங்கு இன்று அதிகாலை 4.30 மணி அளவில் வயது மூப்புகாரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 102. இவரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து, தந்தையை இழந்து வாடும் சினேகனுக்கு ஆறுதல் கூறிவருகின்றனர். நட்புக்குறிய திரையுலக நண்பர்களுக்கும், ஊடகத்துறை நண்பர்களுக்கும் / அனைத்து கட்சி அரசியல் தோழர்களுக்கும் வணக்கம். எனது தந்தையார் இன்று அதிகாலை 4.30 மணிக்கு காலமாகி விட்டார். என்ற துயர தகவலை தெரிவித்து கொள்கிறேன். நாளை காலை 11 மணிக்கு தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள எனது சொந்த கிராமம் புதுக்கரியப்பட்டியில் நல்லடக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். சினேகன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, பைனல் நிகழ்ச்சிக்கு வந்து இருந்த சினேகனின் தந்தை, என் மகனுக்கு எனக்கு பிறகு யாரும் இல்லை, அவனுக்கு திருமணம் செய்து வைத்து பார்க்க வேண்டும் என்பது தான் என் ஆசை என கமல்ஹாசன் முன்னிலையில் கண்கலங்கி பேசி இருந்தார்.


Click it and Unblock the Notifications











