சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி மீது கவிஞர் சினேகன் காவல் ஆணையரிடம் புகார்

சென்னை : தனது தொண்டு நிறுவன பெயரை பயன்படுத்தி, பணமோசடியில் ஈடுபடும் பாஜக பிரமுகர் ஜெயலட்சுமி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பாடலாசிரியர் சினேகன் புகார் அளித்துள்ளார்.

ஆட்டோகிராப், ஆடுகளம் உட்பட பல திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதி பிரபலமானவர் சினேகன். கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் முக்கிய பொறுப்பில் இருக்கும் சினேகன், சின்னத்திரையில் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுள்ளார். தற்போது சினிமாக்கள் பலவற்றிலும் நடித்து வருகிறார்.

Lyricist Snehan files police complaint against tv actress Jayalakshmi

இவர் சினேகம் பவுண்டேஷன் என்ற பெயரில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் தனது தொண்டு நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி பாஜக பிரமுகரும்,சின்னத்திரை நடிகையுமான ஜெயலட்சுமி பணமோசடியில் ஈடுபடுவதாக காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாடலாசிரியர் சினேகன், கடந்த 2015ஆம் ஆண்டு முதல் சினேகம் பவுண்டேஷன் மூலமாக பல உதவிகளை செய்து வருவதாகவும், சமீபமாக இணையதளங்களில் தனது பவுண்டேஷன் பெயரை பயன்படுத்தி சிலர் பண வசூலில் ஈடுபடுவதாக தகவல் வந்ததாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக விசாரித்த போது சமூக வலைதளப் பக்கத்தில் சினேகம் பவுண்டேஷன் என்ற பெயரை பயன்படுத்தி பாஜக பிரமுகரும், நடிகையுமான ஜெயலட்சுமி என்பவர் பண வசூலில் ஈடுபட்டது தெரியவந்ததாக தெரிவித்துள்ளார்.

இதனால் தனது வழக்கறிஞர் மூலமாக தனது பெயரில் போலி தொண்டு நிறுவனம் நடத்திய நபரின் விலாசத்திற்கு நோட்டீஸ் அனுப்பிய போது விலாசம் தவறு என திரும்பி வந்ததாகவும், செல்போனில் தொடர்பு கொண்ட போது நேரில் சமாதானம் பேசி கொள்ளலாம் என அழைத்ததால் சட்டரீதியாக புகார் அளிக்க வந்துள்ளதாக அவர் கூறினார்.

முறைப்படி மத்திய அரசு அங்கீகாரம் பெற்று தனது சொந்த செலவில் சினேகம் பெயரில் தொண்டு நிறுவனம் நடத்தி வருவதாகவும், தனது பெயரை பயன்படுத்தி போலி தொண்டு நிறுவனம் நடத்தி வரும் ஜெயலட்சுமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார். மேலும் நடிகை ஜெயலட்சுமியின் போட்டோவை பயன்படுத்தி யாரேனும் மோசடி செய்கின்றனரா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என அவர் கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X