»   »  எங்க தமிழ் பொண்ணுங்களுக்கு கண்ணியம் இருக்கு: எங்க வீட்டு மாப்பிள்ளையை விளாசிய விவேக்

எங்க தமிழ் பொண்ணுங்களுக்கு கண்ணியம் இருக்கு: எங்க வீட்டு மாப்பிள்ளையை விளாசிய விவேக்

Posted By:
Subscribe to Oneindia Tamil
ஆர்யா கல்யாணம் கேள்விக்குறி?- வீடியோ

சென்னை: ஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியை விளாசியுள்ளார் பாடலாசிரியர் விவேக்.

16 பெண்கள் ஆர்யாவை மணக்கும் கனவோடு எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். தற்போது அகாதா, சுசானா, சீதாலட்சுமி ஆகிய 3 பெண்கள் மட்டுமே போட்டியில் உள்ளனர்.

இதில் ஒருவர் தான் ஆர்யாவை மணக்கப் போகிறார்.

வெட்கம்

வெட்கம்

அடுத்த வீட்டிற்கு வாழப் போகும் பெண்கள் இப்படி யாரோ ஒரு ஆர்யாவை மனதில் நினைத்து அவரை அடைய தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை பார்த்து பலரும் முகம் சுளித்துள்ளனர்.

பெண்கள்

பெண்கள்

ஆர்யாவும் அந்த பெண்களை ஏதோ தன் ஆள் போன்று கட்டிப்பிடிப்பதும், நெருங்கிப் பழகுவதுமாக உள்ளார். இதை எல்லாம் பார்க்கும் மக்கள் அந்த பெண்களின் குடும்பத்தாரை தான் விளாசுகிறார்கள். டிவிக்காரங்க கூப்பிட்டால் வயசுப் பொண்ணுங்களை அனுப்பிவிடுவதா என்று விமர்சிக்கிறார்கள்.

விளாசல்

எங்க வீட்டு மாப்பிள்ளை, சீரியஸா?. 8 வயது சிறுமி கூட பலாத்காரம் செய்யப்படும் நேரத்தில் பெண்களை இப்படி மோசமாக காட்டுவது கொடுமை. ஆர்யாவை திருமணம் செய்வதற்காக தான் பிறந்தது போன்று காட்டியுள்ளனர். நம் தமிழ் பெண்களுக்கு அதை விட அதிக கண்ணியம் உள்ளது. அவர்களை இப்படி காட்டுவதை நிறுத்துங்கள் என்று தெரிவித்துள்ளார் பாடலாசிரியர் விவேக்.

தைரியம்

இது போன்ற சீப்பான நிகழ்ச்சிகளுக்கு எதிராக பேச திரையுலகில் சிலருக்கு தைரியம் உள்ளதே என்று ஒருவர் விவேக்கை பாராட்டியுள்ளார்.

English summary
Lyricist Vivek blasted Arya's Enga Veetu Mappillai programme on twitter. He tweeted that,' Enga Veetu Maapillai..Seriously? At times wen women(even an 8yr old) r taken 4 granted, showing der attitude in such poor light s atrocious. They r shown as if marrying Mr Arya is y dey wer born for I m sure our tamil girls hav m

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X