»   »  எம்.எஸ்.விஸ்வநாதன் - ட்விட்டர் பதிவுகள்

எம்.எஸ்.விஸ்வநாதன் - ட்விட்டர் பதிவுகள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இன்று அதிகாலை உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். சமீபத்தில் தனது 87 வது பிறந்த நாளைக் கொண்டாடிய எம்.எஸ்.வி உடல் நலக்குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டபின்னர் அவர் உடல்நலம் நன்றாக இருக்கிறது, மிகவிரைவில் அவர் வீடு திரும்புவார் என்று அவரது மகன் நம்பிக்கையுடன் பத்திரிக்கைகளுக்கு பேட்டி அளித்திருந்தார்.

M.S.Viswanathan Dead- Twitter Comments

ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக அவரது உயிர் இன்று அதிகாலை சுமார் 4.15 மணியளவில் அவரது உடலை விட்டுப் பிரிந்தது. இசையமைப்பாளர்களில் ராமமூர்த்தி தொடங்கி நேற்று வந்த ஜி.வி.பிரகாஷ் வரை இணைந்து பணியாற்றியிருக்கிறார்.

சுமார் 1200 படங்களுக்கு இசையமைத்து காலத்தால் அழியாத பல பாடல்களைக் கொடுத்த எம்.எஸ்.வியின் மறைவு குறித்து, ரசிகர்கள் பலரும் #RIPMSV என்னும் ஹெஷ்டேக்கை ட்விட்டரில் உருவாக்கி தங்கள் கருத்துக்களை தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.

ரசிகர்களின் ட்விட்டர் கருத்துகளில் இருந்து சிலவற்றை இங்கு காணலாம்.

ராகங்கள் பதினாறு- உருவான வரலாறு

"ராகங்கள் பதினாறு உருவான வரலாறு நான் பாடும்போது அறிவாயம்மா" இந்த வரிகள் அத்தனையும் உண்மை. இன்னும் என்னால் நம்பமுடியவில்லை எம்.எஸ்.வி சார் அவர்கள் நம்முடன் இல்லை என்பதை என்று வருத்தத்துடன் பதிவு செய்திருக்கிறார் விஜய் என்னும் ரசிகர்.

எங்கள் வாழ்க்கையில் ஒரு பகுதி

எம்.எஸ்.வி சார் நீங்கள் மிகவும் நல்ல பாடல்களை கொடுத்து இருக்கிறீர்கள் அதற்கு எங்களது நன்றிகள். சந்தோஷம் மற்றும் துக்கம் எதுவாயினும் உங்களது பாடல்கள் எங்கள் வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே மாறியிருந்தது என்று ஜான்சி நடராஜன் குறிப்பிட்டு இருக்கிறார்.

மெல்லிசை மன்னர்

மெல்லிசைப் பாடல்களின் மன்னரான நீங்கள் உங்கள் பாடல்கள் மூலம் என்றுமே இறவாத ஒரு நிலையை அடைந்து விட்டீர்கள் என்று துர்கா பதிவுசெய்து இருக்கிறார்.

உங்கள் இசை எங்கள் இதயத்தில் நிரம்பி இருக்கும்

காலை எழுந்ததும் அதிர்ச்சி காத்திருந்தது, மெல்லிசையின் ஜாம்பவான் இறந்து விட்டார் என்னும் செய்தியைக் கேட்டு. உங்கள் இசை என்றென்றும் எங்கள் இதயத்தில் நிரம்பி இருக்கும் என்று பிரசன்னா என்னும் ரசிகர் பதிவிட்டு இருக்கிறார்.

இசைத்துறையில் அழுத்தமான காலடித் தடம் உங்களது

எம்.எஸ்.வி சார் மிகநீண்ட (61)வருடங்கள் இசைத்துறைக்காக நீங்கள் உழைத்து இருக்கிறீர்கள், இப்பொழுது நீங்கள் ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள் என்று ரமேஷ் என்னும் ரசிகர் கூறியிருக்கிறார்.

இசையுலகிற்கு இன்று வருத்தமான தினம்

இசையுலகிற்கே இன்று வருத்தமான தினம் என்று எம்.எஸ்.வியின் மறைவுக்கு வருத்தம் தெரிவித்து இருக்கிறார் சுஜாதா சங்கர்.

ஒருநாளும் நான் இதுபோல அழுதது அல்ல

ஒருநாளும் நான் இதுபோல அழுதது அல்ல அந்தத் திருநாளை கடன்கொடுத்தவன் யாரிடம் சொல்ல என்று எம்.எஸ்.வியின் பாட்டு வரிகளைக் கொண்டே தனது சோகத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் ஜெயின் ஜெயபால்.

எங்கே நிம்மதி

எங்கே நிம்மதி எங்கே நிம்மதி அங்கெ எனக்கோர் இடம் வேண்டும் என்று எம்.எஸ்.வியின் பாட்டை அவரின் இறப்புக்கு அர்ப்பணித்து இருக்கிறார் ரயில் கணேசன்.

எம்.எஸ்.வி உறங்கிவிட்டார்

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா உறங்கிவிட்டார் எம்.எஸ்.வி என்று அறந்தை மணி இதயத்தை தொடும்படி பதிவு செய்து இருக்கிறார்.

English summary
Music Composer M.S. Viswanathan Passed Away- Twitter Comments.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil