»   »  கீதாஞ்சலி செல்வராகவனின் 'மாலை நேரத்து மயக்கம்' ரசிகர்களை மயக்கியதா?

கீதாஞ்சலி செல்வராகவனின் 'மாலை நேரத்து மயக்கம்' ரசிகர்களை மயக்கியதா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: செல்வராகவன் எழுத்தில் கீதாஞ்சலி செல்வராகவன் இயக்கியிருக்கும் மாலை நேரத்து மயக்கம் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி இருக்கிறது.

பாலகிருஷ்ண கோலா, வாமிகா ஆகிய புதுமுகங்களின் நடிப்பில் வெளியான மாலை நேரத்து மயக்கம் பெரும்பாலான ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.


மாலை நேரத்து மயக்கம் ரசிகர்களை மயக்கியதா? என்பதை பார்க்கலாம்.


வயது முதிர்ந்தவர்களுடன்

"ஒரு துணிச்சலான திரைக்கதை, இயக்கியிருக்கும் விதம் பார்க்க வேண்டும் என்ற தீவிரத்தை உண்டு பண்ணுகிறது. திரையரங்குகளில் இந்தப் படத்தை வயது முதிர்ந்தவர்களுடன் மட்டும் பாருங்கள்" என்று கூறுகிறார் பர்வேஸ் ஆஸ்மி.


பொருத்தமான கதை

"மாலை நேரத்து மயக்கம் பிடித்திருக்கிறது. கீதாஞ்சலி செல்வா ஒரு பொருத்தமான விஷயத்தை கையாண்டிருக்கிறார். வழக்கமான செல்வராகவன் படம் தான்" என்று ராஜசேகர் கூறியிருக்கிறார்.


முதல் பாதி

மாலை நேரத்து மயக்கம் முதல் பாதி நன்றாக இருக்கிறது. பாலகிருஷ்ணா, வாமிகா நன்றாக நடித்திருக்கின்றனர். மிகவும் தீவிரமான கதை நம்மைத் திசை திருப்பும் எந்த விசயங்களும் படத்தில் இல்லை" ரமேஷின் பதிவிது.


நன்றாக இருக்கிறது

"மாலை நேரத்து மயக்கம் நன்றாக உருவாக்கி இருக்கின்றனர். அதிகம் நடக்கக் கூடிய ஒரு கதைதான்.மனதுக்குப் பிடித்த இசையுடன் படத்தின் கதையை அழகான எடுத்துரைக்கிறார் கீதாஞ்சலி. கதாநாயகி வாமிகா அந்தப் பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்" என்று பாராட்டியிருக்கிறார் தினேஷ்.


இதைப் போன்று பெரும்பாலான ரசிகர்களும் படம் நன்றாக இருப்பதாக சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.English summary
Balakrishna Kola,Wamiqa Gabbi Starring Gitanjali Selvaraghavan's Maalai Nerathu Mayakkam Today Released in Worldwide - Audience Live Response.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil