»   »  ‘மாலை நேரத்து மயக்கம்’... கனவு நினைவானதாக கீதாஞ்சலி செல்வராகவன் மகிழ்ச்சி

‘மாலை நேரத்து மயக்கம்’... கனவு நினைவானதாக கீதாஞ்சலி செல்வராகவன் மகிழ்ச்சி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மாலை நேரத்து மயக்கம் படம் மூலம் ஒளிப்பதிவாளர் ஸ்ரீதருடன் இணைந்து பணியாற்றியது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் இயக்குநர் கீதாஞ்சலி செல்வராகவன்.

காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட வெற்றிப் படங்களைத் தந்தவர் இயக்குநர் செல்வராகவன். நடிகர் தனுஷின் அண்ணனான இவரது மனைவி கீதாஞ்சலி செல்வராகவன்.


இவர் தற்போது மாலை நேரத்து மயக்கம் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் புத்தாண்டு அன்று ரிலீசாக உள்ளது.


Maalai Nerathu Mayakkam on Jan 1st

இந்நிலையில், இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில், இயக்குனர் செல்வராகவன், இயக்குநர் கீதாஞ்சலி செல்வராகவன், இசையமைப்பாளர் அம்ரித், ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர், தயாரிப்பாளர் கோலா பாஸ்கர், படத்தின் நாயகன் பாலகிருஷ்ண கோலா ஆகியோர் கலந்து கொண்டனர்.


Maalai Nerathu Mayakkam on Jan 1st

அப்போது பேசிய கீதாஞ்சலி செல்வராகவன், "நானும் இப்படத்தின் ஒளிப்பதிவாளர் ஸ்ரீதரும் 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படத்தில் ஒன்றாக வேலை செய்தோம், அப்போதே நாங்கள் இருவரும் ஒன்றாக இனைந்து வேலை செய்யவேண்டும் என்று முடிவு செய்து இருந்தோம். அந்த கனவு இப்போது நினைவாகி உள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

English summary
'Maalai Nerathu Mayakkam' directed by Gitanjali Selvaraghavan has been annnounced to hit the screen on New Year on January 1st.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil