»   »  புத்தாண்டில் வெளியாகும் மாலை நேரத்து மயக்கம்!

புத்தாண்டில் வெளியாகும் மாலை நேரத்து மயக்கம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

செல்வராகவன் மனைவி கீதாஞ்சலி முதன் முதலாக இயக்கியுள்ள மாலை நேரத்து மயக்கம் படம் வரும் புத்தாண்டு தினத்தன்று வெளியாகிறது.

இன்னும் ஒரு வாரத்தில் புத்தாண்டு பிறக்கிறது .இந்த புத்தாண்டில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்கள் எதுவும் வெளிவரவில்லை. ஆனால் சிறு மற்றும் நடுத்தர பட்ஜெட்டில் உருவான சில படங்கள் வெளியாகின்றன.

பேய்கள் ஜாக்கிரதை

பேய்கள் ஜாக்கிரதை

அந்த வரிசையில் இந்த புத்தாண்டில் தம்பி ராமையா, மொட்டை ராஜேந்திரன் நடிப்பில் உருவாகியுள்ள ‘பேய்கள் ஜாக்கிரதை' படம் வெளிவருகிறது.

அழகு குட்டி செல்லம்

அழகு குட்டி செல்லம்

கருணாஸ் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘அழகு குட்டி செல்லம்' என்ற படமும் புத்தாண்டுக்கு வெளிவருவது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாலை நேரத்து மயக்கம்

மாலை நேரத்து மயக்கம்

இந்த படங்களை தொடர்ந்து இயக்குனர் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மாலை நேரத்து மயக்கம்' என்ற படமும் புத்தாண்டு தினத்தில் வெளியாகிறது. நீண்டகால தயாரிப்பில் இருக்கும் இப்படத்தை முதலில் செல்வராகவன்தான் இயக்கினார். பின்னர், தனது மனைவியிடம் இயக்கும் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு, படத்தின் வசனத்தை மட்டும் செல்வராகவன் எழுதியுள்ளார். அம்ரித் இசையமைத்துள்ளார். ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

எதிர்ப்பார்ப்பு

எதிர்ப்பார்ப்பு

ஜனவரி 1-ந் தேதி வெளியாகவிருக்கிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு செல்வராகவன் பங்களிப்பில் வெளிவரும் படம் என்பதால் இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு நிலவியுள்ளது.

பொங்கலுக்கு

பொங்கலுக்கு

இந்தப் படங்கள் வெளியான இரண்டு வாரங்களில் பொங்கல் வருகிறது. அன்றைக்கு தாரை தப்பட்டை, ரஜினி முருகன் உள்பட நான்கு படங்கள் வெளியாகின்றன.

English summary
Maalai Nerathu Mayakkam, directed by debutant Geethanjali will be released on New Year day.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil