Don't Miss!
- Sports
ஸ்ரேயாஸ்க்கு பதில் யார்? சூர்யகுமாரா? சுப்மன் கில்லா? தினேஷ் கார்த்திக்கின் பளிச் பதில்
- News
திருப்பத்தூர் அருகே இலவச வேஷ்டி சேலைக்கான டோக்கன் வினியோகம்..நெரிசலில் சிக்கி 4 பெண்கள் பலியான சோகம்
- Lifestyle
உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்ற வேண்டுமா? அப்ப இத தினமும் நைட் டைம்-ல குடிங்க போதும்..!
- Technology
வீட்டுல இருக்குற எல்லோருக்கும் 1 வாங்கும் விலையில் அறிமுகமான Noise இயர்பட்ஸ்!
- Automobiles
மாருதியின் புதுமுக காரை டெலிவரி பெற்ற ஜப்பான் தூதரக தலைவர்! எந்த காருனு தெரிஞ்சா நீங்களும் வாங்க விரும்புவீங்க
- Finance
மார்ச் மாதம் கெடு.. அதானி குழுமத்திற்கு வந்த புதிய பிரச்சனை..!
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
மாநாடு திரைப்படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? சிம்புவுக்கு அடித்த ஜாக்பாட்!
சென்னை: மாநாடு படத்திற்காக உடல் எடையை முழுவதுமாக குறைத்து தன்னை முழுவதுமாக இயக்குநர் வெங்கட் பிரபுவை நம்பி அர்பணித்த சிம்புவுக்கு இந்த படம் எதிர்பார்த்ததை போலவே கை கொடுத்து இருக்கிறது.
மாநாடு படத்தை பார்த்த பலரும் பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வரும் நிலையில், டிக்கெட் புக்கிங் மேலும் அதிகரித்துள்ளது.
திரையரங்குகளில் மேலும், அதிகமான காட்சிகளும், திரைகளும் ஒதுக்கப்பட்டு வருகின்றன.
சோஷியல்
மீடியாவை
மிரள
வைத்த
மாநாடு....
மாஸாக
தெறிக்க
விட்ட
ரசிகர்கள்

தடைகளை தகர்த்து
கடைசி நேரம் வரை சிம்புவின் மாநாடு திரைப்படம் வெளியாகுமா? ஆகாதா? என படக்குழுவினரே பயத்துடன் இருந்த நிலையில் அனைத்து பிரச்சனைகளும் சுமூக பேச்சுவார்த்தைகளால் தீர்க்கப்பட்டு திட்டமிட்டபடி நேற்று படம் வெளியானது. மாநாடு திரைப்படத்தை தியேட்டரில் சிம்பு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

பாசிட்டிவ் விமர்சனம்
சிம்பு முதல் முறையாக சயின்ஸ் ஃபிக்ஷன் கான்செப்ட்டான டைம் லூப் திரைப்படத்தில் நடித்துள்ளார். கரணம் தப்பினால் மரணம் என்கிற கதையை தைரியத்துடன் தேர்வு செய்து இயக்குநர் வெங்கட் பிரபுவின் மேல் முழு நம்பிக்கை வைத்து உருவான இந்த படம் வெளியாகி அனைத்து தரப்பிலும் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றுள்ளது.

முதல் நாள் வசூல்
தமிழ்நாட்டில் சிம்புவின் மாநாடு திரைப்படம் முதல் நாளில் 5 முதல் 7 கோடி வரை வசூல் ஈட்டியுள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் டிராக்கர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். நடிகர் சிம்புவுக்கு இது மிகப்பெரிய ஓப்பனிங் என்றும் படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பு காரணமாக இந்த வார இறுதியில் மிகப்பெரிய வசூல் வேட்டையை மாநாடு நிகழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

10 கோடி வசூல்
தமிழ்நாடு தவிர்த்து உலகம் முழுவதும் மாநாடு வெளியான நிலையில், மொத்தமாக 3 கோடி அளவுக்கு அந்த படம் முதல் நாளில் வசூல் ஈட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழ்நாடு வசூல் 7 கோடி மற்றும் பிற மாநிலங்களின் வசூலை சேர்த்து ஒட்டுமொத்தமாக முதல் நாளில் மாநாடு திரைப்படம் அதிக பட்சமாக 10 கோடி ரூபாய் வசூலித்திருக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

அதிகரிக்கும் புக்கிங்
டாக்டர் திரைப்படத்திற்கு பிறகு மாநாடு படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ள நிலையில், ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக படத்தை பார்க்க தியேட்டரை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு என மூன்று நாட்கள் உள்ள நிலையில், முதல் வாரமே படம் 30 கோடி வரை வசூல் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.