Don't Miss!
- News
சென்னையில் பிப்ரவரி 1,2 தேதிகளில் ஜி20 கல்விப் பணிக் குழுவின் முதலாவது கூட்டம்
- Lifestyle
இந்த சூப்பர் உணவுகள் தாமதமான உங்கள் மாதவிடாயை சில மணி நேரங்களில் வரவைக்குமாம்...!
- Technology
யூஸ் பண்றீங்களோ இல்லயோ.. உங்க லேப்டாப்பில் இந்த வெப் ப்ரவுஸர் இருக்கா? அப்போ அலெர்ட் ஆகிக்கோங்க!
- Sports
"அந்த ஒரு விஷயம்.. உலகில் சூர்யகுமாரிடம் மட்டுமே உள்ள திறமை.. ரிக்கிப் பாண்டிங் புகழாரம் - விவரம்
- Automobiles
டாடாவை கதையை முடிக்க பிளான்... ரயிலைபோல் அடுத்தடுத்து ஆறு எலெக்ட்ரிக் கார்களை களமிறக்கு போகிறது மாருதி சுஸுகி!
- Finance
2 நாளில் 12 லட்சம் கோடி ரூபாய் அவுட்.. சென்செக்ஸ் 800 புள்ளிகளுக்கு மேல் சரிவில் முடிவு..!
- Travel
சூரிய சுற்றுலாவா? இது என்ன புதிய சுற்றுலாவா இருக்கே – இதை பார்க்க எங்கு செல்வது?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
உலகம் முழுவதும் மாஸ் காட்டிய ‘மாநாடு‘…. வசூல் எவ்வளவு தெரியுமா ?
சென்னை : மாநாடு திரைப்படம் உலகம் முழுவதும் மாஸ் காட்டி பல கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாநாடு படத்திற்காக உடல் எடையை முழுவதுமாக குறைத்து தன்னை முழுவதுமாக இயக்குநர் வெங்கட் பிரபுவை நம்பி அர்பணித்த சிம்புவுக்கு இந்த படம் எதிர்பார்த்ததை போலவே கை கொடுத்து இருக்கிறது.
மாநாடு படத்தில் சிம்பு மற்றும் எஸ்.ஜே.க்ஷ்சூர்யாவின் நடிப்பை பார்த்த பலரும் பாராட்டி தள்ளினர்.
100 கோடி கிளப்பில் இணைய தயாராகும் மாநாடு...11 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா ?

மாநாடு
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் மாநாடு. நீண்ட போராட்டங்கள், பல தடைகளைக் கடந்து நவம்பர் 25 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட்டது. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் இந்த படம் ரிலீஸ் செய்யப்பட்டது.

பல நட்சத்திரங்கள்
சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன்,எஸ்.ஜேசூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர், ஒய் ஜி மகேந்திரன், பிரேம்ஜி என ஒரு நட்சத்திர பட்டாளமே இத்திரைப்படத்தில் நடித்திருந்தனர். சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

டைம் லூப்
மாநாடு திரைபடம் ஒரு டைம் லூப் கான்செப்ட் ஐ மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படமாகும். தமிழில் முதல் முறையாக டைம் லூப் முறையில் படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ஒன்லைனாக முதலமைச்சரை கொல்ல நடக்கும் சதி திட்டத்தில் சிம்பு மாட்டிக்கொண்டு அதில் இருந்து எப்படி வெளிவருகிறார் என்பதை பற்றியே ஆகும்.

பிரம்மாண்ட வெற்றி
மாநாடு படத்தில் அப்துல் காலீக் ரோலில் சிம்புவும், தனுஷ்கோடி என்ற போலீஸ் அதிகாரி ரோலில் எஸ்.ஜே.சூர்யாவும் நடித்திருந்தனர். இருவரின் நடிப்பும் பெரிய அளவில் பாராட்டை பெற்றதுடன், மாநாடு படத்திற்கு பிரம்மாண்ட வெற்றியை பெற்று தந்துள்ளது.

முதல் நாள் வசூல்
தமிழ்நாட்டில் சிம்புவின் மாநாடு திரைப்படம் முதல் நாளில் 5 முதல் 7 கோடி வரை வசூல் ஈட்டியதாக தகவல் வெளியாகின. நடிகர் சிம்புவுக்கு இது மிகப்பெரிய ஓப்பனிங் என்றும் படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பு காரணமாக மிகப்பெரிய வசூல் வேட்டையை மாநாடு நிகழ்த்தும் என எதிர்பார்க்கப்பட்டது.

செம்ம வசூல்
இந்நிலையில் லேட்டஸ்ட் தகவலாக கடந்த இரு நாட்களில் மாநாடு படம் வசூலித்த தொகை பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. உலகம் முழுவதும் மாநாடு படம் வசூலித்த தொகை ரூ.75 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் அதிகபட்சமாக தமிழகத்தில் ரூ.53 கோடிகளை மாநாடு படம் வசூலித்துள்ளதாம்.