சிம்புவின் மாநாடு இரண்டாவது டிரைலர் எப்போது ?

சென்னை : டைரக்டர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் மாநாடு. வி ஹவுஸ் ப்ரொடக்ஷன்ஸ் பேனரில் சுரேஷ் காமாட்சி இந்த படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

கல்யாணி பிரியதர்ஷன், எஸ்ஜே சூர்யா, பிரேம்ஜி, கருணாகரன், எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது. நவம்பர் 4 ம் தேதி தீபாவளிக்கே ரிலீசாகும் என முதலில் அறிவிக்கப்பட்டு, பிறகு கடைசி நிமிடத்தில் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது.

முதல் டைம்லூப் படம்

முதல் டைம்லூப் படம்

இந்தியாவின் முதல் அரசியல் டைம் லூப் படம் இது. அரசியல், த்ரில்லர் படமான இந்த படத்தில் சிம்பு - எஸ்ஜே சூர்யா இடையேயான காட்சிகளை பார்க்க ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள். இந்த படம் நவம்பர் 25 ம் தேதி தியேட்டரில் பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இசை வெளியீட்டு விழா

இசை வெளியீட்டு விழா

இந்நிலையில் மாநாடு படத்தின் இசை வெளியீட்டு விழா நவம்பர் 18 ம் தேதி வெளியிடப்பட உள்ளதாம். இந்த மியூசிக் ஆல்பத்துடன் படத்தின் இரண்டாவது டிரைலரையும் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே சென்சார் சான்றிற்காக மாநாடு படம் அனுப்பப்பட்டுள்ளது. சென்சார் போர்டு குழுவினர் இந்த வாரம் மாநாடு படத்தை பார்க்க உள்ளனர்.

இது தான் கதையா

இது தான் கதையா

மாநாடு படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் டப் செய்து வெளியிடப்பட உள்ளது. முதலமைச்சரின் அரசியல் மாநாட்டில் ஒரு சாமானிய மனிதனுக்கும், போலீஸ் அதிகாரிக்கும் இடையே நடக்கும் மோதல்கள் தான் படத்தின் கதை.

இதுக்கு தான் வெயிட்டிங்

இதுக்கு தான் வெயிட்டிங்

சென்சார் போர்டு சான்று எப்போது கிடைக்கும் என தெரியாததால் மாநாடு படம் நவம்பர் 25 அன்று ரிலீசாகுமா என்பது உறுதியாக தெரியவில்லை. படக்குழுவினரும் ரிலீஸ் தேதியை உறுதியாக அறிவிக்காமல் சஸ்பென்ஸ் வைத்து வருகின்றனர். இதற்கிடையில் மாநாடு படத்தை ரிலீஸ் செய்ய விடாமல் சிலர் சதி செய்து வருவதாக சிம்புவின் குடும்பத்தினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

ரசிகர்களை கவர்ந்த வசனம்

ரசிகர்களை கவர்ந்த வசனம்

அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருக்கும் மாநாடு படத்தின் முதல் டிரைலர் சில மாதங்களுக்கு முன் வெளியிடப்பட்டது. இது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இதில் எஸ்ஜே சூர்யா மற்றும் சிம்பு பேசும், வந்தான் சுட்டான் செத்தான் என்ற ஃபாஸ்ட் மோட் வசனங்கள் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

வரிசையாக படங்கள்

வரிசையாக படங்கள்

மாநாடு படத்தை முடித்து விட்டு, வெந்து தணிந்தது காடு, பத்து தல, கொரோனா குமாரு உள்ளிட்ட படங்களின் வேலைகளில் வரிசையாக ஈடுபட்டு வருகிறார் சிம்பு. அடுத்தடுத்த படங்களில் சிம்பு கவனம் செலுத்தி வருவதால் ரசிகர்களிடம் இவரின் படங்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X