Don't Miss!
- News
"முன்பதிவு செயலி தேவை" ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வை காப்பாற்ற.. தமிழக அரசை வலியுறுத்தும் சீமான்!
- Sports
உடைந்த கைகளால் பேட்டிங்.. அணிக்காக ஒற்றை கையில் போராடிய ஹனுமா விஹாரி.. எதிரணி வீரர்களே பாராட்டு!
- Automobiles
டாடா மாருதி ஆட்டம் எல்லாம் இனி குளோஸ்! க்விட் இவி வந்ததும் துண்டை காணும் துணிய காணும்னு ஓட போறாங்க!
- Lifestyle
பளபளப்பான ஜொலிக்கும் சருமத்தை பெற... நீங்க ஏன் இயற்கை பொருட்களை மட்டும் பயன்படுத்தனும் தெரியுமா?
- Finance
எத்தியோப்பியா, கென்யாவோட ஜிடிபி-க்கு சமமான வீழ்ச்சி.. அதானி குழுமத்திற்கு அடிக்கு மேல் அடி!
- Technology
36 லட்ச WhatsApp பயனர்களுக்கு ஆப்பு.! உப்பு தின்னா தண்ணி குடிக்கனும்., தப்பு செஞ்சா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
100 கோடி கிளப்பில் இணைய தயாராகும் மாநாடு...11 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா ?
சென்னை : டைரக்டர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் மாநாடு. நீண்ட போராட்டங்கள், பல தடைகளைக் கடந்து நவம்பர் 25 ம் தேதி இந்த படம் ரிலீஸ் செய்யப்பட்டது. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் இந்த படம் ரிலீஸ் செய்யப்பட்டது.
அரசியல், த்ரில்லர், டைம் லூப் படமான மாநாடு படம் ரசிகர்கள், பிரபலங்கள் என அனைத்து தரப்பினரிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
எனக்கு
பாட்டு
பாட
தெரியாது..கத்தத்தான்
தெரியும்..கிராம
நாயகன்
சசிகுமார்
ஓபன்
டாக்
!

பாராட்டை பெற்ற மாநாடு
மாநாடு படத்தில் அப்துல் காலீக் ரோலில் சிம்புவும், தனுஷ்கோடி என்ற போலீஸ் அதிகாரி ரோலில் எஸ்.ஜே.சூர்யாவும் நடித்திருந்தனர். இருவரின் நடிப்பும் பெரிய அளவில் பாராட்டை பெற்றதுடன், மாநாடு படத்திற்கு பிரம்மாண்ட வெற்றியை பெற்று தந்துள்ளது.

வசூலை வெளியிட்ட தயாரிப்பாளர்
படம் ரிலீசான அடுத்த நாளே சக்சஸ் பார்ட்டி கொண்டாடிய மாநாடு டீம், ரசிகர்களுக்கு நன்றி சொல்லி வீடியோவும் வெளியிட்டனர். மாநாடு 2 படத்தையும் தயாரிக்கும் முயற்சிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் மாநாடு படத்தின் வசூல் பற்றிய தகவலை சுரேஷ் காமாட்சி அவ்வப்போது ட்விட்டரில் வெளியிட்டு வந்தார்.

11 நாட்களில் மாநாடு வசூல்
இந்நிலையில் லேட்டஸ்ட் தகவலாக கடந்த 11 நாட்களில் மாநாடு படம் வசூலித்த தொகை பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 11 நாட்களில் உலகம் முழுவதும் மாநாடு படம் வசூலித்த தொகை ரூ.77 கோடிகளை கடந்து விட்டதாம். இதில் அதிகபட்சமாக தமிழகத்தில் ரூ.53 கோடிகளை மாநாடு படம் வசூலித்துள்ளதாம்.

100 கோடி கிளப்பில் இணைகிறதா
கர்நாடகாவில் 3.35 கோடியும், கேரளாவில் 1.65 கோடியும், இந்தியாவின் மற்ற பகுதிகளில் 1.50 கோடியும், வெளிநாடுகளில் 17.50 கோடியும் மாநாடு படம் வசூலித்துள்ளது. ரிலீசான 11 நாட்களில் 77 கோடி வசூலை கடந்து விட்டதால், 15 நாட்களுக்குள் மாநாடு படம் 100 கோடி கிளப்பில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Recommended Video

டிரெண்டிங்கில் சிம்பு படங்கள்
மாநாடு படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியால் சிம்பு அடுத்தடுத்து நடித்து வரும் படங்களின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மாநாட்டை தொடர்ந்து வெந்து தணிந்தது காடு ஹாஷ்டேக்கும் ட்விட்டரில் டிரெண்டிங் ஆக்கப்பட்டுள்ளது.