சிம்புவின் வாழ்நாள் கனவு அண்ணாத்த மூலம் நிறைவேறுகிறது!

சென்னை : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரைப்படங்கள் ஒவ்வொரு முறை வெளியாகும் போதும் தமிழ்நாடு மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் ஆரவாரமாக எதிர்பார்க்கிறார்கள்.

இந்த வகையில் சிறுத்தை சிவா கூட்டணியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இணைந்துள்ள அண்ணாத்த திரைப்படமும் பல்வேறு கட்டங்களாக வேற லெவலின் தயாராகி வருகிறது.

இந்த நிலையில் அண்ணாத்த திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்ததை அடுத்து சிம்புவின் நீண்ட நாள் கனவும் நிறைவேறுகிறது.

ரஜினிகாந்த் முதல் முறையாக

ரஜினிகாந்த் முதல் முறையாக

ரஜினிகாந்தின் திரைப்படங்கள் ஒவ்வொரு முறை வெளியாகும் போதும் புதிய வசூல் சாதனைகளை செய்து வருகிறது. அதில் எந்திரன் செய்த சாதனையை 2. O முறியடித்து இந்திய அளவில் அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளது. இந்த நிலையில் ரஜினிகாந்த் முதல் முறையாக சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் இணைந்து அண்ணாத்த திரைப்படத்தில் நடித்துள்ளார்.

மீண்டும் எடுக்கப்பட்டு

மீண்டும் எடுக்கப்பட்டு

ஹைதராபாத்தில் முழுவீச்சில் நடைபெற்று வந்த அண்ணாத்த படப்பிடிப்பு கொரோனா காரணமாக தடைபட்டது. அதன் பிறகு சென்னையில் பெரும்பாலான காட்சிகள் எடுக்கப்பட்டு வந்தது. மீதமுள்ள சில காட்சிகள் மட்டும் ஹைதராபாத்தில் மீண்டும் எடுக்கப்பட்டு படப்பிடிப்புக் காட்சிகள் அத்தனையும் முடிக்கப்பட்டது.

பல வருடங்களுக்கு பிறகு

பல வருடங்களுக்கு பிறகு

கதாநாயகிகளாக நயன்தாரா மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிக்க குஷ்பூ,மீனா இதில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஒரே திரைப்படத்தில் 4 முன்னணி கதாநாயகிகள் ஒன்றாக இணைந்து நடிப்பதால் இப்படம் கூடுதல் கவனத்தை பெற்றுள்ளது. மீனா நீண்ட இடைவெளிக்குப் பிறகு சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடிக்கிறார். அதேபோல குஷ்புவும் பல வருடங்களுக்கு பிறகு ரஜினிகாந்துடன் இணைந்துள்ளார்.

கையில் வீச்சரிவாளுடன்

கையில் வீச்சரிவாளுடன்

அஜித்துக்கு தொடர்ந்து நான்கு மாஸ் ஹிட்டுகளை கொடுத்த சிறுத்தை சிவா இப்பொழுது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து பக்கா வில்லேஜ் ஸ்டோரியில் படத்தை இயக்கி வருகிறார். சமீபத்தில் அண்ணாத்த படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டு மாஸ் காட்டியது . அதில் ரஜினிகாந்த் கொல்கத்தாவில் புல்லட் வண்டியில் கையில் வீச்சரிவாளுடன் கொலைவெறியில் தீப்பிளம்பு பறக்க சுற்றுகிறார்.

சிம்புவின் வாழ்நாள் கனவு

சிம்புவின் வாழ்நாள் கனவு

அதில் அண்ணாத்த படம் தீபாவளிக்கு வெளியாகும் என உறுதி செய்தது படக்குழு. அண்ணாத்த வெளியீட்டு தேதி வெளியான அடுத்த நாளே சிம்புவின் மாநாடு படமும் தீபாவளிக்கு வெளியாகிறது என அறிவிக்கப்பட்டது. சூப்பர் ஸ்டார் மற்றும் லிட்டில் சூப்பர் ஸ்டார் திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது . சிறுவயது முதலே ரஜினிகாந்தைப் போலவே தானும் பெரிய நடிகராக வரவேண்டும் என்பது சிம்புவின் வாழ்நாள் கனவாக உள்ளது. அப்படிப்பட்ட நிலையில் சிம்பு மற்றும் ரஜினிகாந்த் திரைப்படங்கள் ஒரே நாளில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாவதால் சிம்புவின் வாழ்நாள் கனவு நிறைவேறுகிறது என கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் அதே சூழலில் இந்த இரண்டு திரைப்படங்களில் யார் திரைப்படம் அதிக வசூலை அள்ளும் என்ற எதிர்பார்ப்பும் அதிக அளவில் உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X