»   »  உச்சா பசங்க..., மாமா மர்கையா... வேற என்ன... தமிழ் சினிமா இலக்கியம்தான்!

உச்சா பசங்க..., மாமா மர்கையா... வேற என்ன... தமிழ் சினிமா இலக்கியம்தான்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தலைப்பில் நீங்கள் படித்த இரண்டு வாக்கியங்களும் தமிழ் சினிமா ஒன்றின் பாட்டு வரிகளின் ஆரம்பம்.

மா.கா.பா.ஆனந்த் ஹீரோவாக நடிக்கும் மாணிக் படத்தில் இந்தப் பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

Maanik shooting over

இப்படத்தில் ஹீரோயினாக சூஷா குமார் நடிக்கிறார். இரண்டாவது ஹீரோவாக வத்சன் நடிக்க, அருள்தாஸ், ஏர்டெல் சூப்பர் சிங்கர் போட்டியில் கலந்துக்கொண்ட அணு, புஜ்ஜி பாபு, கோலிசோடா சீதா, ஜாங்கிரி மதுமிதா, சிவசங்கர், மனோபாலா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.

Maanik shooting over

'நாளைய இயக்குநர்' சீசன் 5- ன் வெற்றியாளர் மார்டின் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்த நிலையில், தற்போது பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது.

Maanik shooting over

படம் குறித்து இயக்குநர் மார்டின் கூறுகையில், "ஆசிரமத்தில் வளர்ந்த ஹீரோ மா.கா.பா.ஆனந்த் மற்றும் இரண்டாவது ஹீரோ வத்சன் வீரமணி, இருவரும் ஒரு விஷயத்தில் பெரிய அளவில் சாதிக்க ஆசிரமத்தில் இருந்து கிளம்புகிறார்கள், அப்படி அவர்கள் சாதிக்க நினைத்தது என்ன, அந்த சாதனை முயற்சியில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், இறுதியில் நினைத்ததை சாதித்தார்களா இல்லையா என்பதை பேண்டசியாக சொல்லியிருக்கிறோம். அவர்களின் சாதனை பயணம் எந்த விஷயத்திற்காக என்பது சஸ்பென்ஸ்," என்றார்.

தரன்குமார் இசையமைப்பில் மூன்று பாடல்கள். "உச்சா...பசங்க...", " மாமா மர்கையா...", "அட பாவி..." என்று தொடங்கும் இந்த மூன்று பாடல்களையும் இளைஞர்கள் மிர்ச்சி விஜய் எழுதியுள்ளார்.

Maanik shooting over

எம்.ஆர்.பழனிகுமார் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு கே.எம்.ரியாஸ் படத்தொகுப்பு செய்கிறார். கலையை வினோத் நிர்மாணிக்க, ஆடை வடிவமைப்பை செந்தில்குமார் கவனிக்கிறார். ரஞ்சித், கே.ஆர்.பழனியப்பன், ஜெகன் நாதன் ஆகியோர் தயாரிப்பு நிர்வாகத்தை கவனிக்க, பி.ஆர்.ஒ பணியை சுரேஷ்சுகு கவனிக்கிறார்.

Maanik shooting over

காமெடி கலந்த பேண்டசி படமாக உருவாகும் 'மாணிக்' படத்தின் பஸ்ட் லுக் டீசர் இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ளது.

English summary
The shooting of MaKaPa Anand starring Maanik has been over and post production is going on

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil