»   »  325 திரையரங்குகளில் வெளியானது தனுஷின் மாரி... என்ன சொல்கிறார்கள் ரசிகர்கள்?

325 திரையரங்குகளில் வெளியானது தனுஷின் மாரி... என்ன சொல்கிறார்கள் ரசிகர்கள்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு முழுவதும் 325 திரையரங்குகளில் இன்று வெளியாகி இருக்கிறது தனுஷின் மாரி திரைப்படம். ரம்ஜான் ஸ்பெஷலாக இன்று திரைக்கு வந்திருக்கும் மாரி ரம்ஜான் ரேஸில் தனியாக கலந்து கொள்கிறது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரஜினிமுருகன் மற்றும் வாலு படங்களின் வெளியீடு தள்ளிப் போனதால் தனியாக களத்தில் குதித்திருக்கிறது தனுஷின் மாரி. பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷுடன் இணைந்து காஜல் அகர்வால், விஜய் ஜேசுதாஸ், ரோபோ சங்கர் ஆகியோர் நடித்திருக்கும் இந்தப் படம் காமெடிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டிருக்கிறது.


அனிருத் ரவிச்சந்தர் இசையில் பாடல்கள் அதிரடியாக வந்திருக்கின்றன, குறிப்பாக தர லோக்கல் பாடலை ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றார்கள். இசை மட்டுமல்லாது படத்தில் ஒரு சிறப்புத் தோற்றத்திலும் நடித்திருக்கிறாராம் அனிருத்.


மாரி கதை

மாரி கதை

படத்தின் முதல் பாதியில் புறா ரேஸில் கலந்து கொள்பவராகவும், இரண்டாம் பாதியில் டானாகவும் நடித்திருக்கிறார் தனுஷ். படத்தில் காஜலுக்கு பெரிதாக வேலை ஒன்றும் இல்லை, வழக்கம் போல தனுஷை விழுந்து விழுந்து காதலிக்கும் நாயகியாக வந்து போகிறார். தனுஷை எதிர்க்கும் போலீஸ் அதிகாரியாக மாரியில் அவதாரம் எடுத்திருக்கிறார் பாடகர் விஜய் ஜேசுதாஸ்.


மாரி பாசிட்டிவ் விமர்சனங்கள்

மாரி பாசிட்டிவ் விமர்சனங்கள்

மாரி படத்திற்கு விமர்சனங்கள் சாதகமாக அமைந்துள்ளது என்று மீடியாக்கள் கூறுகின்றன, படத்தைப் பார்த்த ஒரு சில பேர் தங்கள் கருத்துக்களை படத்திற்கு ஆதரவாகவே தெரிவித்து உள்ளனர்.


மாரியை வாழ்த்திய பாகுபலி டீம்

மாரி படம் பாகுபலி என்னும் புயலுக்கு முன்னால் தாக்குப் பிடிக்குமா? என்று அனைவரும் கேள்வி எழுப்பி இருந்தனர். நேற்று மாலை நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் இதற்குப் பதிலளித்துப் பேசிய நடிகர் தனுஷ் பாகுபலி வந்து ஒருவாரம் கடந்துவிட்டது, எனவே பெரிதாக பாதிப்பு ஒன்றும் இருக்காது என்று கூறி இருந்தார். தற்போது மாரி படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் என்று பாகுபலி படக்குழுவினர் வாழ்த்தி உள்ளனர்.


ரோபோ ஷங்கரின் காமெடி

மாரி படத்தின் முதல் பாதியில் ரோபோ ஷங்கரின் காமெடி நன்றாக வந்துள்ளது என்று பெருவாரியான ரசிகர்கள் பாராட்டி உள்ளனர். மாரி ஓரளவிற்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருக்கிறது என்று படத்தைப் பார்த்தவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.


English summary
"Maari", Movie directed by Balaji Mohan and starring Dhanush and Kajal Aggarwal in the lead, is assured with a solo release in around 325 screens.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil