»   »  மாரி ரசிகர்களின் தாறுமாறான ட்விட்டர் பதிவுகள்

மாரி ரசிகர்களின் தாறுமாறான ட்விட்டர் பதிவுகள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனுஷின் நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் மாரி திரைப்படம் தமிழ்நாடு முழுவதும் சுமார் 325 திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. வேலை இல்லாப் பட்டதாரி திரைப்படம் கடந்த வருடம் இதே நாளில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.

எனவே செண்டிமெண்ட்டாக இந்த வருடம் அதே நாளில் மாரி படத்தை வெளியிட்டிருக்கிறார் நடிகர் தனுஷ், தனுஷின் செண்டிமெண்ட் அவருக்குக் கைகொடுக்குமா என்பது இன்னும் சிலதினங்களில் தெரிந்துவிடும்.


மாரி படத்தைப் பார்த்த ரசிகர்கள் ட்விட்டரில் படத்தை வாழ்த்தியும், திட்டியும் தங்கள் கருத்துக்களை கலவையாகக் கொடுத்துள்ளனர். ரசிகர்களின் ட்விட்டர் பதிவுகளில் இருந்து சிலவற்றை இங்கு நாம் காணலாம்.


மாரி -பலவீனமான கதை

சமீபகாலங்களில் தனுஷின் பலவீனமான கதை என்று மாரி திரைப்படத்தைச் சொல்லலாம். அதே நேரத்தில் இது தனுஷ் ரசிகர்களுக்கான படமாக மட்டுமே உள்ளது" என்று சுரேந்தர் என்னும் ரசிகர் கூறியிருக்கிறார்.


ஏமாற்றி விட்டது

நான் மிகவும் எதிர்பார்த்து படத்தை பார்க்கச் சென்றேன், சொல்வதற்கு ஒன்றும் இல்லை படம் மிகவும் சலிப்படைய வைக்கிறது என்று பிரவீன் கரண் என்னும் ரசிகர் தனது கருத்தைத் தெரிவித்து இருக்கிறார்.


தனுஷ் ரசிகர்கள் கொண்டாடும் மாரி

கிளைமாக்ஸ் சூப்பர் படம் கண்டிப்பாக ஹிட் ஆகும், மாரி தனுஷ் ரசிகர்களின் கொண்டாட்டம் என்று கூறியிருக்கிறார் மெய்யப்பன் என்னும் ரசிகர்.


ஆறிப்போன பூரி

மாரி ஆறிப்போன பூரின்னு ரைமிங்கா கமெண்ட் பண்ணியிருக்காரு ராபன் ராஜ் என்னும் ரசிகர்.


புதுப்பேட்டை + ஆடுகளம் = சுள்ளான்

மாரி படத்தை புதுப்பேட்டை படத்தையும் ஆடுகளம் படத்தையும் கலந்து எடுத்திருக்காரு இயக்குநர் பாலாஜி மோகன்.ஆனா படம் என்னவோ சுள்ளான் ரேஞ்சுக்கு தான் வந்திருக்குன்னு சொல்லியிருக்கார் அப்பு என்னும் ரசிகர்.


வில்லன் முக்கியம் பாஸ்

ரஜினி, அஜீத், விஜய், சூர்யா, சிம்பு, தனுஷ் எல்லோரும் நல்ல திறமையான வில்லன தேர்ந்தெடுத்து நடிங்க, இல்லேன்னா உங்களோட ஹீரோ பவர் குறைஞ்சிடும். அதுக்கு நல்ல உதாரணம் மாரி திரைப்படம்னு சொல்லி இருக்காங்க ஆர்த்தி என்னும் ரசிகை.


செஞ்சிருவேன் மாரி

நல்லா வச்சு செய்றானுக என்று கோபத்துடன் ட்வீட்டி இருக்கிறார் திருவருள்.


ஒருதடவ பார்க்கலாம்

பணம் வந்துடும் ஒருதடவ படத்தப் பார்க்கலாம், தனுஷ் கூட ரோபோ சங்கர் வர்ற சீன்ஸ ரசிக்கலாம் என்று சற்று ஆறுதலாக ட்வீட் செய்து இருக்கிறார் மேக்னா ராவ்.


பாலாஜி மோகனக் கேட்கணும்

மாரி படம் நல்லா இல்லேன்னா தனுஷ் என்ன பண்ணுவார், பாலாஜி மோகனப் போய் கேளுன்னு சொல்றாங்க என்று காமெடி செய்து இருக்கிறார் சைதைஜெகன்.


சேதாரம் இல்லாம காப்பாத்திரு மாரியாத்தா

மாரி படம் பார்க்க வந்திருக்கேன் சேதாரம் இல்லாமக் காப்பாத்திரு மாரியாத்தா என்று கடவுளை வேண்டிக் கொண்டு படத்தைப் பார்க்கிறாராம் புருஷோத்தமன்.


English summary
Maari Movie has opened to mixed reviews from the audience. Below, we bring the Fan’s tweets.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil