»   »  தெலுங்கில் 'மாஸ்' காட்டப்போகும் 'மாரி' தனுஷ்

தெலுங்கில் 'மாஸ்' காட்டப்போகும் 'மாரி' தனுஷ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த ஆண்டு தமிழில் வெளியான மாரி படம் வருகின்ற 18ம் தேதி மாஸ் என்னும் பெயரில் தெலுங்கில் வெளியாகிறது.

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், காஜல் அகர்வால், ரோபோ சங்கர், விஜய் யேசுதாஸ் ஆகியோர் நடிப்பில் கடந்த வருடம் வெளியான படம் மாரி.


தனுஷ் ரவுடியாக நடித்திருந்த இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் கிடைத்தன. செண்டிமெண்டாக படத்தை ரம்ஜான் தினத்தில் வெளியிட்டார் தனுஷ்.


Maari Telugu Release Date

ஆனால் விஐபி படத்திற்கு கிடைத்த வசூலும், வரவேற்பும் மாரிக்கு கிடைக்கவில்லை. இந்நிலையில் இப்படத்தை தெலுங்கில் டப் செய்து மாஸ் என்ற பெயரில் படக்குழு வெளியிடுகின்றது.இந்த செய்தியை ட்விட்டர் பக்கத்தில் இயக்குநர் பாலாஜி மோகன் உறுதிப்படுத்தியிருக்கிறார். மேலும் இப்படத்தின் தெலுங்கு டிரைலரையும் அவர் வெளியிட்டிருக்கிறார்.


விரைவில் பாலாஜி மோகன், தனுஷ் கூட்டணியில் மாரி படத்தின் 2 வது பாகம் உருவாகவிருப்பது குறிப்பிடத்தகது.


English summary
Director Balaji Mohan Tweeted "Maari releasing in Telugu as #Maas on March 18th".

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil