»   »  ரஜினி, அஜீத், விஜய், சிம்பு, டோணியுடன்... உங்கள் மனங்கவர்ந்த பிரபலங்கள் தோன்றும் "மாரி"

ரஜினி, அஜீத், விஜய், சிம்பு, டோணியுடன்... உங்கள் மனங்கவர்ந்த பிரபலங்கள் தோன்றும் "மாரி"

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் தனுஷ் நடித்து விரைவில் வெளிவர இருக்கும் படம் மாரி, சமீபத்தில் படத்தின் டிரைலர் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. டிரைலரும் அதில் இடம்பெற்ற வசனங்களும் சமூக வலைதளங்களில் பெரிதும் பயன்படுத்தப் படுகின்றன.

தற்போது இன்னும் ஒருபடி மேலே போய் மாரி டிரைலரில் தனுஷிற்குப் பதிலாக ரஜினி, அஜீத், விஜய், சிம்பு, டோணி போன்றவர்கள் நடித்தால் எப்படி இருக்கும், என்று யோசித்த புண்ணியவான்கள் அதனை அப்படியே உல்டாவாக்கி யூடியூபில் வெளியிட்டு உள்ளனர்.


அதுக்கும் மேலே போய் யோசித்த சிலர் அயன்மேன் மாரி டிரைலரில் நடிப்பது போன்று, வெளியிட்ட வீடியோ ஹைய்யோ..சான்சே இல்ல. ரூம் போட்டு யோசித்து இருக்கிறார்கள் என்பது ஒவ்வொரு வீடியோவையும் பார்க்கும் போதே தெரிகிறது.


எல்லா வீடியோவையும் பார்த்து சிரித்து மகிழுங்கள்....முடியல


ரஜினி

சூப்பர்ஸ்டார் ரஜினி மருமகன் தனுஷின் டிரைலரில் நடிப்பது போன்ற இந்த வீடியோவில், பாட்ஷா படம் மற்றும் கருப்பு வெள்ளை காலத்துப் படங்களைப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.இதுவரை 4 ஆயிரம் பேர் இந்த வீடியோவைப் பார்த்து ரசித்து உள்ளனர்.


அஜீத்

அஜீத்தின் சிறுவயது புகைப்படங்கள் மற்றும் என்னை அறிந்தால், பில்லா, ஆரம்பம், வீரம் போன்ற படங்களில் அஜீத் பேசிய வசனங்களை மாரி டிரைலரில் பேசுவது போன்று, வீடியோவை மாற்றி இருக்கின்றனர். இந்த வீடியோவை இதுவரை 17 ஆயிரத்திற்கும் அதிகமான பேர் பார்த்து ரசித்துள்ளனர்.


விஜய்

நண்பன் படம் தொடங்கி போக்கிரி, தலைவா, வேட்டைக்காரன், ஜில்லா, கத்தி, மதுர போன்ற படங்களின் காட்சிகளை வைத்து இந்த வீடியோவை உருவாக்கி இருக்கின்றனர்.இதுவரை 41 ஆயிரத்திற்கும் அதிகமான பேர் இந்த வீடியோவைப் பார்த்து மகிழ்ந்துள்ளனர்.


சிம்பு

தனுஷின் மாரியுடன் சிம்புவின் வாலு படமும் மோத இருந்த நிலையில் சிம்புவையும் விட்டு வைக்கவில்லை புண்ணியவான்கள், சிம்புவின் சிறுவயது புகைப்படங்கள் வாலு மற்றும் விண்ணைத்தாண்டி வருவாயா போன்ற படங்களில் இருந்து உருவாக்கிய இந்த வீடியோவை இதுவரை 10 ஆயிரத்திற்க்கும் அதிகமானோர் பார்த்து ரசித்துள்ளனர்.


சூர்யா

அஞ்சான், சில்லுன்னு ஒரு காதல், ஆறு மற்றும் மாசு போன்ற படங்களில் சூர்யா பேசிய வசனங்களை வைத்து இந்த டிரைலரை உருவாக்கி உள்ளனர். மிகக் குறைந்த அளவில் பார்க்கப்பட்ட டிரைலர் இதுவாகத்தான் இருக்கும். இதுவரை 1௦௦௦ பேர் மட்டுமே இதனைப் பார்த்து உள்ளனர்.


பிரேம்ஜி அமரன்

மங்காத்தா மற்றும் கோவா படங்களில் இருந்து உருவாக்கிய பிரேம்ஜியின் வீடியோவை இதுவரை 18 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பார்த்து ரசித்துள்ளனர்.


அயன்மேன்

அயன்மேனை வைத்து விளையாடி இருக்கும் இந்த வீடியோவை இதுவரை 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வீடியோவைப் பார்த்து ரசித்து உள்ளனர்.


தோனி

நடிகர்கள் தவிர்த்து இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனியை வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த வீடியோவை இதுவரை 12 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பார்த்து ரசித்துள்ளனர்.


English summary
Maari Trailer Remix Version: Rajini, Ajith, Vijay, Simbu And Dhoni.
Please Wait while comments are loading...