Don't Miss!
- News
"இதோ டேட்டா பாருங்க".. அண்ணாமலைக்கு எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. வேலையை காட்டிய ஓபிஎஸ்.. என்னாச்சு?
- Technology
WhatsApp மெசேஜ்ஜை அடுத்தவருக்கு தெரியாமல் படிப்பது எப்படி? இந்த சீக்ரெட் மோட்-ஐ ON செய்யுங்க.!
- Sports
"3 தனித்தனி அணிகள்.. ஆனாலும் ஒரு சிக்கல்".. பிசிசிஐ திட்டம் குறித்து கபில் தேவ் அறிவுரை.. அடேங்கப்பா
- Automobiles
கண் தெரியாமல் லாரியை ஓட்டும் டிரைவர்கள்! டாக்டர்கள் நடத்திய ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!
- Finance
இது மட்டும் நடந்துட்டா..? மாத சம்பளக்காரர்களுக்குப் பெரும் கொண்டாட்டம் தான்..!
- Education
LIC ADO Recruitment 2023:எல்.ஐ.சி.,யில் 1516 பட்டதாரிகளுக்கு வாய்ப்பு...!
- Lifestyle
சாணக்கிய நீதியின் படி திருமணத்திற்கு முன் இந்த விஷயங்களை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க... இல்லனா பிரச்சினைதான்!
- Travel
உலகின் 7வது பழமையான நாடு இந்தியா – முதலிடத்தில் இருப்பது இந்த நாடா?
மாவீரன் படக்குழுவின் பொங்கல் கொண்டாட்டம்... ஜோடியாக வந்த சிவகார்த்திகேயன், அதிதி
சென்னை: டான், பிரின்ஸ் திரைப்படங்களைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது 'மாவீரன்' படத்தில் நடித்து வருகிறார்.
மடோன்
அஸ்வின்
இயக்கும்
இந்தப்
படத்தில்
சிவகார்த்திகேயன்
ஜோடியாக
அதிதி
ஷங்கர்
நடிக்கிறார்.
தமிழ்,
தெலுங்கு
என
இரண்டு
மொழிகளில்
உருவாகும்
இந்தப்
படத்தின்
படப்பிடிப்பு
வேகமாக
நடைபெற்று
வருகிறது.
இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினியின் முரட்டுக்காளை பட பிஜிஎம்முடன் மாவீரன் படக்குழுவினர் வெளியிட்டுள்ள வீடியோ ட்ரெண்டாகி வருகிறது.
கழுத்தை
நெறிக்கும்
கடன்...
மாவீரன்
படத்துக்கு
வந்த
சிக்கல்...?:
அப்செட்டான
சிவகார்த்திகேயன்!

சிவாவின் மாவீரன்
டாக்டர் திரைப்படம் மூலம் கம்பேக் கொடுத்த சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து டான், பிரின்ஸ் என வெரைட்டி காட்டினார். அதனைத் தொடர்ந்த் அவர் தற்போது மாவீரன் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். மண்டேலா திரைப்படம் மூலம் பிரபலமான மடோன் அஸ்வின், அந்தப் படத்திற்கு தேசிய விருதையும் வென்று அசத்தினார். அவரது இயக்கத்தில் தான் சிவகார்த்திகேயனின் மாவீரன் படம் உருவாகி வருகிறது. தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்து வருகிறார்.

பொங்கல் கொண்டாட்டம்
மேலும், இதில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக மிஷ்கின் நடித்து வருகின்றனர். இந்தப் படத்திற்காக சிவகார்த்திகேயன் வைத்துள்ள புதிய லுக் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், மிஷ்கின், மடோன் அஸ்வின் என முற்றிலும் புதிய கூட்டணியில் உருவாகும் இந்தப் படம், கண்டிப்பாக சூப்பர் ஹிட் அடிக்கும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் மாவீரன் படக்குழுவினர் பொங்கல் கொண்டாடிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

முரட்டுக்காளை பிஜிஎம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் முரட்டுக்காளை படத்தில் வரும் 'அண்ணனுக்கு ஜே' பாடலின் பிஜிஎம்முடன் தொடங்கும் இந்த வீடியோவில், புதுப் பானையில் பொங்கலிடுகின்றனர் மாவீரன் படக்குழுவினர். வேஷ்டி சட்டையில் கெத்தாக சிவகார்த்திகேயனும், பாவாடை தாவணியில் க்யூட்டாக அதிதியும் பொங்கலை கொண்டாடியுள்ளனர். அவர்களுடன் நடிகை சரிதா உள்ளிட்ட மாவிரன் படக்குழுவினர் இந்தப் பொங்கல் கொண்டாட்டத்தில் பங்கேற்றுள்ளனர். அதுமட்டும் இல்லாமல் குரூப் போட்டோ எடுத்தும் மாஸ் காட்டியுள்ளனர்.

விரைவில் ரிலீஸ் தேதி
மாவீரன் படக்குழுவினர் பொங்கல் கொண்டாடிய வீடியோ ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. முன்னதாக சிவகார்த்திகேயன் சொந்த தயாரிப்பு நிறுவனத்தால் கடன் பிரச்சினையில் சிக்கியதாக சொல்லப்பட்டது. மேலும், இந்த கடன் சிக்கலால் மாவீரன் படம் ரிலீஸாவது சந்தேகமே எனவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், இதெல்லாம் வெறும் வதந்தி தான் என்றும், விரைவில் மாவீரன் படத்தின் ரிலீஸ் தேதியை படக்க்ழு அறிவிக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.