»   »  மாவீரன் கிட்டு.. தேசிய விருதுகளைப் பெற்றுத் தரும்... சுசீந்திரன், பார்த்திபன் நம்பிக்கை

மாவீரன் கிட்டு.. தேசிய விருதுகளைப் பெற்றுத் தரும்... சுசீந்திரன், பார்த்திபன் நம்பிக்கை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஷ்ணு நடித்துள்ள மாவீரன் கிட்டு படத்திற்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும் என அதன் இயக்குநர் சுசீந்திரன் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு நாயகனாக நடித்துள்ள படம் மாவீரன் கிட்டு. வெண்ணிலா கபடி குழு', 'ஜீவா' படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக இப்படத்தின் மூலம் சுசீந்திரன், விஷ்ணு கூட்டணி அமைத்துள்ளனர். இப்படத்தின் நாயகியாக ஸ்ரீ திவ்யா நடித்துள்ளார். நடிகர் பார்த்திபன் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.

Maaveeran Kittu Movie First Look&Teaser Launch function

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில், பர்ஸ்ட் லுக்கை இயக்குநர் சமுத்திரகனி வெளியிட படத்தின் டீசரை இயக்குநர் பா. ரஞ்சித் வெளியிட்டார்.

அதனைத் தொடர்ந்து விழாவில் சுசீந்திரன் பேசுகையில், "அழகர் சாமியின் குதிரை' திரைப்படத்துக்காக எனக்கு தேசிய விருது கிடைத்தது. அதேபோல் 'மாவீரன் கிட்டு' திரைப்படத்துக்கும் எனக்கு தேசிய விருது கிடைக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன்" என்றார்.

அவரைத் தொடர்ந்து பேசிய நடிகர் விஷ்ணு, "நான் இப்படத்தின் மூலம் இயக்குநர் சுசீந்திரன் அவர்களுடன் மூன்றாவது படத்தில் இணைகிறேன். இப்படம் நிச்சயம் உங்கள் மனதை தொடும் ஒரு படமாக இருக்கும்'' என நம்பிக்கைத் தெரிவித்தார்.

இதேபோல், விழாவில் இயக்குநர் சமுத்திரகனி பேசுகையில், "இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்க்கும்போது எனக்கு மாபெரும் போராளி மாவீரன் திலீபன் அவர்கள் தான் நினைவுக்கு வருகிறார். இயக்குநர் சுசீந்திரன் இப்படத்தின் மூலம் அழுத்தமான ஒரு பதிவை தமிழ் சினிமாவுக்கு வழங்குவார் என்று நினைக்கிறேன்" என்றார்.

இயக்குநர் பா.ரஞ்சித் பேசும்போது, ''இப்படத்தின் டீசரை பார்க்கும்போது சமூகத்துக்கு தேவையான முக்கியமான ஒரு படைப்பை இயக்குநர் சுசீந்திரன் இயக்கியுள்ளார் என்பது தெரிகிறது. இப்படத்தை பார்க்கும்போது நாயகன் ஏதோ ஒரு முக்கிய சமூக பிரச்சனைக்காக போராடுவதுபோல் தோன்றுகிறது" எனத் தெரிவித்தார்.

இவர்களைத் தொடர்ந்து படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள பார்த்திபன் பேசுகையில் " 'ஆயிரத்தில் ஒருவன்' , 'அழகி' திரைப்படத்தைப் போன்று இப்படம் எனக்கு கண்டிப்பாக நல்ல பெயர் வாங்கி தரும். ஏனென்றால் என்னுடைய கதாபாத்திரம் அப்படி. 'ஹவுஸ்புல்' திரைப்படத்துக்கு பின் இப்படத்துக்காக நான் நிறைய விருதுகளை வாங்குவேன் என நம்புகிறேன்" என்றார்.

English summary
Actor vishnu starrar Maaveeran Kittu Movie's teaser was launched in a function held in Chennai.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil