»   »  மாயா இயக்குநர்... அடுத்தும் பேயா?

மாயா இயக்குநர்... அடுத்தும் பேயா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

நயன்தாராவை வைத்து அட்டகாசமான பேய்ப் படம் தந்த அஸ்வின் சரவணன் அடுத்து தனது புதிய படத்தை அறிவித்துள்ளார்.

இந்தப் படத்தை மோமன்ட் என்டர்டெயின்மென்ட் சார்பில் ஜி ஏ ஹரிகிருஷ்ணன் தயாரிக்கிறார்.

இவர் ஏற்கெனவே ஹிந்து ரங்கராஜனின் பேரன் ரோஹித் ரமேஷுடன் இணைந்து 'மோ' என்ற படத்தைத் தயாரித்துள்ளார்.

Maaya director announces next project

இந் படம் விரைவில் வரவிருக்கிறது. அதற்கடுத்த படம்தான் மாயா இயக்குநரின் புதிய படம். அஸ்வின் சரவணன் இந்த படத்திற்கு கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கவுள்ளார்.

மாயா மாதிரியே இந்தப் படமும் பேய்ப் படமா? என்றால்.. பொருத்திருந்து பாருங்கள் என்கிறார் அஸ்வின் சரவணன்.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கான நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என்று தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.

தயாரிப்பாளர் ஹரி கிருஷ்ணன், இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய ஜிகர்தண்டா படத்திலும் காக்கா முட்டை படத்தை இயக்கிய மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகிவரும் ஆண்டவன் கட்டளை உள்ளிட்ட பல படங்களுக்கு தயாரிப்பு மேற்பார்வையாளராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடதக்கது.

English summary
Maaya movie director Ashwin Saravanan has announced his next untitled project.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil