எங்க அண்ணனுக்கு எதிரா காசு வாங்கிட்டு ஃபேக் நியூஸ் போடுவேனா.. விஜய் விவகாரம்.. மதன் கெளரி விளக்கம்!
சென்னை: பிரபல யூடியூபரான மதன் கெளரி தவெக தலைவர் விஜய்க்கு எதிராக காசு வாங்கிக் கொண்டு வீடியோ வெளியிடுகிறார் என பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விளக்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கரூரில் 41 பேர் கூட்ட நெரிசல் காரணமாக பரிதாபமாக பலியான துயரச் சம்பவத்தை தொடர்ந்து விஜய்க்கு எதிராகவும் ஆதரவாகவும் சோஷியல் மீடியாவில் ஏகப்பட்ட கருத்துக்கள் குவிந்து வருகின்றன. முக்தார், நக்கீரன் கோபால் உள்ளிட்டோர் வெளிப்படையாக விஜய் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர்.

விஜய்க்கு எதிராக தொடர்ந்து யூடியூபர்களை சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்சர்களையும் சிலர் தூண்டிவிட்டு மோசடி செய்து வருவதாகவும் ஆனால், நான் அப்படி செய்ய மாட்டேன் என்றும் மதன் கெளரி விளக்கம் அளித்துள்ளார்.
மதன் கெளரி காசு வாங்கிட்டாரு: சாதாரண ஸ்மார்ட் போனில் உள்ள கேமராவில் வீடியோ எடுத்து பின்னாடி பேக்கிரவுண்டில் செய்தித் தாள்களை வைத்து தினமும் நடைபெறும் விஷயங்கள் குறித்து விளக்கமாக பேசி வீடியோ வெளியிட்டு வரும் மதன் கெளரிக்கு பல மில்லியன் சப்ஸ்கிரைபர்கள் கூடிவிட்டனர். விளம்பரங்கள், பிரபலங்களின் பேட்டி என தற்போது மதன் கெளரியின் ரேஞ்சே மாறிவிட்டது.
நான் அவனில்லை: மதன் கெளரியே காசு வாங்கி விஜய்க்கு எதிராக வீடியோ போடுகிறார், நீங்களும் போடணும் என இன்ஃப்ளூயன்சர் ஒருவரை பிரைன் வாஷ் பண்ணும் போன் கால் ஆடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வந்த நிலையில், பலரும் மதன் கெளரி காசு வாங்கிக் கொண்டு விஜய்க்கு எதிராக கரூர் விஷயத்தில் பேசப் போகிறாராம் என ட்ரோல் செய்ய தொடங்கியதும், நான் அவனில்லை என்றும் இது முழுக்க முழுக்க வதந்தி என கமெண்ட் போட்டு வந்த மதன் கெளரி இதை வைத்தே ஒரு வீடியோவையும் போட்டுள்ளார்.
விஜய் அண்ணாவுக்கு எதிராக நானா?: தன்னை பற்றி பரவி வரும் செய்தி அனைத்தும் திட்டமிட்ட சதி என்றும் பயங்கர ஸ்கேம் ஒன்று தமிழ்நாட்டில் நடைபெற்று வருவதாக கூறிய மதன் கெளரி எல்லாமே சரி, எங்க அண்ணனுக்கு எதிராக நான் வீடியோ போடுவேன் சொன்ன இடத்துல மாட்டிக்கிட்டீங்களே என்றும் கரூர் துயரத்துக்குப் பிறகும் தொடர்ந்து விஜய் அண்ணாவுக்கு ஆதரவாகவே நான் இருப்பேன் என பதிவிட்டு வருகிறேன். எப்போதுமே விஜய் அண்ணாவுக்கு எதிராக பேச மாட்டேன் என மதன் கெளரி திட்டவட்டமாக கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











