»   »  தள்ளிப்போனது விஷாலின் 'எம்ஜிஆர்' கொண்டாட்டத்தில் உதயநிதி

தள்ளிப்போனது விஷாலின் 'எம்ஜிஆர்' கொண்டாட்டத்தில் உதயநிதி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஷாலின் 'மதகஜராஜா' வெளியீட்டுத் தேதி மீண்டும் தள்ளிப் போயிருக்கிறது.

விஷால், வரலட்சுமி, அஞ்சலி, சந்தானம் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'மதகஜராஜா'. சுந்தர்.சி இயக்கிய இப்படம் கடந்த 2013 ம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகவிருந்தது.


Madha Gaja Raja Release Postponed

ஆனால் படத்தைத் தயாரித்த ஜெமினி ஃபிலிம் சர்க்யூட் தயாரிப்புப் பிரச்சினைகளால் மதகஜராஜாவைக் கிடப்பில் போட்டது.


நீண்ட வருடங்கள் கிடப்பில் போடப்பட்ட மதகஜராஜா வருகின்ற 29 ம் தேதி வெளியாகும் என விஷால் சமீபத்தில் அறிவித்திருந்தார். இதனையொட்டி இப்படத்திற்கான விளம்பரங்களும் களைகட்டத் தொடங்கின.


இந்நிலையில் வருகின்ற 13 ம் தேதிக்கு இப்படம் மீண்டும் தள்ளிப்போயிருக்கிறது. மற்றொருபுறம் விஷால் நடிப்பில் உருவாகியிருக்கும் 'மருது' மே 20 ம் தேதி வெளியாகவுள்ளது.


Madha Gaja Raja Release Postponed

ஒருவார இடைவெளியில் அடுத்தடுத்து 2 படங்கள் வெளியானால் தியேட்டர் தொடங்கி பாக்ஸ் ஆபிஸ் வரை அனைத்திலும் சிக்கல்தான் என்பதால் விஷால் தற்போது வருத்தத்தில் இருக்கிறாராம்.


அதேநேரம் விஷாலுக்கு வருத்தத்தைக் கொடுத்த 'மதகஜராஜா' உதயநிதிக்கு சந்தோஷத்தைக் கொடுத்திருக்கிறது.


தன்னுடைய 'மனிதன் திரைப்படத்திற்கு போட்டியாக இருந்த 'மதகஜராஜா' தள்ளிப்போயிருப்பது தான் உதயநிதியின் சந்தோஷத்திற்குக் காரணம்.

English summary
Vishal's Madha Gaja Raja Release Again Postponed.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil