"ஓய்‘ பொண்டாட்டி" ஜாய் கிரிஸில்டா வெளியிட்ட புதிய வீடியோ.. வசமா சிக்கிய மாதம்பட்டி ரங்கராஜ்!

சென்னை: மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றி விட்டதாக ஜாய் கிரிஸில்டா காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கும் நிலைகள், தற்போது மாதம்பட்டி ரங்கராஜின் புதிய வீடியோ ஆதாரம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மெஹந்தி சர்கஸ் படத்தின் மூலம் நடிகராக மாறிய மாதம்பட்டி ரங்கராஜ், அதன்பின் கேசினோ, மிஸ் மேகி, பெண்குயின் போன்ற படங்களில் நடித்தார். தற்போது, விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக இருககிறார். இவருக்கு ஏற்கனவே, திருமணமாகி ஸ்ருதி என்ற மனைவியும் இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில், ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். அந்த போட்டோவை ஜாய் கிரிஸில்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு, ஆறு மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும் பதிவிட்டு இருந்தார்.

மாதம்பட்டி ரங்கராஜ்: முதல் மனைவி இருக்கும் போது, அவரை விவாகரத்து செய்யாமல், இரண்டாவதாக எப்படி ஜாய் கிரிஸில்டாவை திருமணம் செய்து கொள்ள முடியும் என்ற சர்ச்சை எழுந்தன. தற்போது ஜாய் கிரிஸில்டா, மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டார் என காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், என்னுடைய கணவர் மாதம்பட்டி ரங்கராஜ் தான், எனக்காகவும், என்னுடைய குழந்தைக்காகவும் தான், நான் வழக்கு பதிவு செய்து இருக்கிறேன். என்னுடைய குழந்தைக்கு அவர் தான் அப்பா.

Madhampatty Rangaraj Joy Crizildaa
Photo Credit:

என் குழந்தைக்கு அவர் தான் அப்பா: எனக்கும் அவருக்கும், சென்னையில் இருக்கும் திருவீதி அம்மன் கோவிலில் திருமணம் நடந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே எங்களுக்கு திருமணம் நடந்து விட்டது. நானும் அவரும் ஒரே அப்பார்ட்மெண்டில் தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். அது அனைவருக்கும் தெரியும். அவர், தன்னுடைய முதல் மனைவியுடன் 'judicial separation'ல் இருப்பதாக சொன்னதை நம்பித்தான், நான் திருமணம் செய்தேன். ஆனால், இப்போது அவர் என்னை நிராகரித்து வருகிறார். நான் அவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என பேசி இருந்தார்.

புதிய வீடியோ: இந்நிலையில்,ஜாய் கிரிஸில்டா தனது ட்விட்டர் பக்கத்தில் மாதம்பட்டி தனக்கு அனுப்பிய வீடியோவை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் மாதம்பட்டி ரங்கராஜ், ஓய் பொண்டாட்டி... என்னடி பண்ற பொண்டாட்டி.. ஐ மிஸ் யூ... ஐ ல்வ் யூ பொண்டாட்டி என பேசி உள்ளார். இந்த வீடியோவை ஜாய் பதிவிட்டது இல்லாமல். தன் குழந்தையை சுமந்து கொண்டு இருக்கும் பெண்ணுக்கு துரோகம் செய்யக்கூடிய ஆண் யாரையும் காட்டிக் கொடுப்பான் என பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வரும் நிலையில், இணையவாசிகள் பலரும், இதைவிட ஸ்ட்ராங் ஆதாரம் கொடுங்க.. இது உங்களுக்கு தான் சொன்னார்னு நாங்க எப்படி நம்புறது என பதிவிட்டு வருகின்றனர்.


More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X