மாதம்பட்டி ரங்கராஜ் ஆஜர்.. நேருக்கு நேர் சந்தித்துக்கொண்ட இரண்டு மனைவிகள்.. ஆத்தாடி செம ட்விஸ்ட்

சென்னை: மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாய் கிரிஸில்டா அளித்த புகார்தான் தமிழ் திரைத்துறையில் மிகப்பெரிய விவாதத்தை கிளப்பியது. தொடர்ந்து அமைதியாக இருந்த ரங்கராஜ் நேற்றுதான் நீண்ட விளக்கம் ஒன்றை அளித்தார். சூழல் இப்படி இருக்க அவரும், புகார் அளித்த ஜாய் கிரிஸில்டாவும் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

சமையல் கலைஞரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றிவிட்டதாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். தனக்கும் அவருக்கும் திருமணம் நடந்த புகைப்படங்களை கிரிஸில்டா வெளியிட்டதை தொடர்ந்து; ஒரு பொது நிகழ்ச்சிக்கு தனது முதல் மனைவி ஸ்ருதியுடன் வந்திருந்தார். அதனால் கடுப்பான பிறகுதான் ஜாய் கிரிஸில்டா இந்தப் புகாரை கொடுத்ததாக கூறப்படுகிறது.

தொடர்ந்து வீடியோக்கள்: புகார் கொடுத்தது மட்டுமின்றி ரங்கராஜ் தனக்கு அனுப்பிய வீடியோக்கள், இரண்டு பேரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் என ஒவ்வொன்றாக இறக்கினார் ஜாய். அதற்கெல்லாம் எந்த ரியாக்‌ஷனும் கொடுக்காமல் மாதம்பட்டியார் அமைதியே காத்திருந்தார். ஒருகட்டத்தில் நிலைமை கைமீறி போவதை உணர்ந்த அவர் தன்னை பற்றி ஜாய் கிரிஸில்டா பேசுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். ஆனால் அதெல்லாம் தடை விதிக்க முடியாது என்று நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.

Madhampatty Rangaraj appeared with his first wife for questioning in the complaint filed by Joy Crizildaa
Photo Credit:

ரங்கராஜ் அளித்த விளக்கம்: தொடர்ந்து மௌனமாகவே இருந்து வந்த ரங்கராஜ் நேற்று ஒரு விளக்கமளித்தார். அந்த விளக்கத்தில் நீதித்துறை செயல்பாட்டில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது என்பதையும், சட்டத்தின்படி உண்மை நிலைநாட்டப்படும். இந்த சர்ச்சையைத் தீர்க்க நான் மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளேன் என்பதையும் திட்டவட்டமாகக் கூற விரும்புகிறேன்.

சட்டப்படி எதிர்கொள்வேன்: நான் இந்த சர்ச்சையை சட்டத்தின்படி எதிர்கொள்வேன். ஜாய் கிரிசில்டா எதிர்பார்ப்பது போல் நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வு காண ஒப்புக்கொள்ள மாட்டேன். எனது நலனில் அக்கறை காட்டி, எனக்கு உறுதுணையாக இருந்து, ஆதரவு மற்றும் பிரார்த்தனைகள் வழங்கிய அனைத்து நலன்விரும்பிகளுக்கும், எனது இதயபூர்வமான நன்றி" என்று குறிப்பிட்டிருந்தார். அவரது இந்த விளக்கத்தை அடுத்து வழக்கம்போல் ஜாய் கிரிஸில்டா பதிவுகளை தொடர்ந்து போட்டுக்கொண்டுதான் இருந்தார்.

நேரில் ஆஜர்: சூழல் இப்படி இருக்க விசாரணைக்கு ஆஜராகுமாறு மாதம்பட்டி ரங்கராஜுக்கும், ஜாய் கிரிஸில்டாவுக்கும் மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. எனவே இன்று இரண்டு பேரும் ஆஜரானார்கள். ஆனால் எதிர்பார்க்காத ட்விஸ்ட்டாக ரங்கராஜ் தனது முதல் மனைவி ஸ்ருதியுடன் வந்திருந்தார். ஜாய் தனது வழக்கறிஞரோடு ஆணையத்துக்கு வந்திருந்தார்.முதலில் ஸ்ருதியுடன் விசாரணை நடக்கும் வளாகத்துக்கு ரங்கராஜ் செல்ல; அடுத்ததாக ஜாய் கிரிஸில்டா சென்றார்.

முதன்முறையாக: இந்த விவகாரத்தில் ரங்கராஜின் முதல் மனைவி ஸ்ருதி இதுவரை பெரிதாக எந்த ரியாக்ட்டும் செய்யவில்லை. இப்படிப்பட்ட நிலைமையில்தான் அவரை அழைத்து வந்திருக்கிறார் ரங்கராஜ். ஆணைய வளாகத்தில் ஸ்ருதியும், ஜாய் கிரிஸில்டாவும் நேரில் சந்தித்துக்கொள்ளும் சூழ்நிலை உருவானதாகவும், இரண்டு பேரும் சில நொடிகள் மட்டும் பார்த்துக்கொண்டு திரும்பிவிட்டதாகவும் அங்கிருந்தவர்கள் கூறுகிறார்கள். தற்போது ரங்கராஜிடமும், ஜாயிடமும் விசாரணை நடந்துவருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X