சிங்கப்பெண்ணாக மாறிய ஜாய் கிரிஸில்டா.. மாதம்பட்டி ரங்கராஜ் என்ன செய்யப்போறாரு?.. இப்போதைக்கு ஓயாதோ?

சென்னை: ஜாய் கிரிஸில்டா பிரபல ஆடை வடிவமைப்பாளர். அவர் அண்மையில் மாதம்பட்டி ரங்கராஜுடன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அதுதொடர்பான, புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. அதுமட்டுமின்றி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ரங்கராஜ் மீது புகார் அளித்ததும் பெரிய பேசப் பொருளாக இந்த விவகாரத்தை மாற்றியது.

பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் சரவணன் இயக்கிய மெஹந்தி சர்க்கஸ் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆனவர். அந்த படம் விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்டது. மேலும் மாதம்பட்டி ரங்கராஜின் நடிப்பும் அனைவராலும் கவனிக்கபட்டது. முக்கியமாக முதல் படம்போல் அவரது நடிப்பு இல்லவே இல்லை என்றும் சீனியர் ஆக்டர் போல் பக்குவமாக நடித்தார் என்றும் பலரும் தங்களது பாசிட்டிவ் ரெஸ்பான்ஸை அள்ளிக்கொடுத்தார்கள். இதனால் திரைத்துறையில் மேற்கொண்டு பேமஸ் ஆனார் மாதம்பட்டியார்.

சமையலில் கில்லி: நடிகராக அறிமுகமாகி பேமஸ் ஆவதற்கு முன்னரே செலிபிரிட்டிகளின் வீடுகளில் நடக்கும் விசேஷங்களுக்கு தனது சமையல் டீமுடன் களமிறங்கி அட்டகாசமாக சமைத்து கொடுத்து பிரபல்யத்தை தேடிக்கண்டவர் அவர். தனது தந்தை வழியிலேயே கேட்டரிங் சர்வீஸ் தேர்ந்தெடுத்து அதன் மூலம் இந்தியா முழுவதும் பெயரெடுத்தார். இதனால் அவரது புகழ் எல்லோரிடமும் பரவ ஆரம்பித்தது.

Madhampatty Rangaraj Controversy Joy Crizildaa s Instagram Stroy is Trending
Photo Credit:

திருமணம்: இவர் ஸ்ருதி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு ஆண் மகன்கள் இருக்கிறார்கள். திருமண வாழ்க்கை சுமூகமாக போய்க்கொண்டிருந்த சூழலில் பொன்மகள் வந்தால் திரைப்படத்தின் இயக்குனர் பெட்ரிக்கின் முன்னாள் மனைவியான ஜாய் கிரிஸில்டாவுடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி திருமணத்தில் முடிந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பஞ்சாயத்தான காதல்: அது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகின. சூழல் இப்படி இருக்க சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்த ஜாய் கிரிஸில்டா மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாகவும்; தனது குழந்தைக்கு அவர்தான் பொறுப்பு என்றும்; அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் அளித்தார். அதனையடுத்து மாதம்பட்டி ரங்கராஜ் நீதிமன்றம் செல்ல ஜாயோ ரங்கராஜுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் இருக்கிறார்.

சிங்கப்பெண்ணாக மாறிய ஜாய்: இந்நிலையில் ஜாய் கிரிஸில்டா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியல் தினம் ஒரு போஸ்ட் போடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் உருவான சிங்க பெண்ணே பாடல் வரிகளை தனது ஸ்டோரியாக வைத்திருக்கும் அவர், கடவுள் உயர்வானவர் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். அவரது இந்த ஸ்டோரி தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X