சபதமெடுத்த மாதம்பட்டி ரங்கராஜின் முதல் மனைவி.. ஜாய் கிரிசில்டா குறித்து இன்ஸ்டாவில் போஸ்ட்!

சென்னை: நடிகர் மற்றும் சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்யாமலே, ஆடை வடிவமைப்புக் கலைஞர் ஜாய் கிரிசில்டாவை சட்டத்திற்கு புறம்பாக இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இப்போது ஜாய் கிரிசில்டா நிறைமாத கர்ப்பிணியாகவும் உள்ளார். இப்படி இருக்கும்போது, இவர்கள் பிரச்னை பூதாகரமாக மாற, கடந்த சில மாதங்களாக வழக்கு, விசாரணை என்றுதான் நடந்து கொண்டுள்ளது. மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஜாய் கிரிசில்டா தான் மாறி மாறி சமூக வலைதளங்களில் போஸ்ட் போட்டுக் கொண்டு உள்ளார்கள். இப்படி இருக்கையில் மாதம்பட்டி ரங்கராஜின் முதல் மனைவி ஸ்ருதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதல் முறையாக பதிவிட்டது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

மாதம்பட்டி ரங்கராஜ் இந்திய அளவில் அறியப்படும் சமையல் கலைஞராக உள்ளார். இது மட்டும் இல்லாமல் விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளியில் நடுவராகவும் வலம் வருகிறார். சில மாதங்களுக்கு முன்னர் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா தனது சமூக வலைதள பக்கங்களில் மாதம்பட்டி ரங்கராஜ் உடன் மாலையும் கழுத்துமாகவும், இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டது போன்ற புகைப்படங்களையும் வெளியிட்டார். இது மட்டும் இல்லாமல், தான் 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

Madhampatty Rangaraj First Wife Shruthi Slams Joy Crizilda On Instagram
Photo Credit:

அவரது இந்த போஸ்ட் பலருக்கும் ஷாக் கொடுத்தது. காரணம், மாதம்பட்டிக்கு திருமணமாகி இரண்டு ஆண் குழந்தைகள் டீன் - ஏஜில் இருக்கிறார்கள். மாதம்பட்டி ரங்கராஜ் விவாகரத்து செய்து கொள்ளாமல், இரண்டாவது திருமணம் செய்து கொண்டது பலருக்கும் ஷாக். இது தொடர்பாக வழக்கு தொடுத்த ஜாய் கிரிசில்டா, மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றி விட்டார். எனது குழந்தைக்கு அவர்தான் அப்பா என்று தெரிவித்தார். இப்படி இருக்கையில், இவர்களின் வழக்கு விசாரணை, ஜாய் கிரிசல்டாவின் பேட்டிகள் என பலவும் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டே வந்தது. மேலும் சமூக வலைதளப் பக்கங்களில் மாதம்பட்டியுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள், வீடியோக்களை பகிர்ந்து பலரையும் அலற விட்டார் ஜாய்.

முதல் ஸ்டேட்மெண்ட்: இந்த விவகாரத்தில் முதன் முதலாக தனது நிலைப்பாட்டை சமூக வலைதளப் பக்கத்தில் வெளிப்படுத்தி உள்ளார், மாதம்பட்டி ரங்கராஜின் முதல் மனைவியான ஸ்ருதி. அதாவது, " என் மீது பலரும் கரிசணம் காட்டுவதைப் பார்த்தால் நான் மிகவும் கொடுத்து வைத்தவள் என்று நினைக்கத் தோன்றுகிறது. நானும் எனது குழந்தையும் என்னென்ன பிரச்னைகளை எதிர்கொண்டு வருகிறோம் என்று தெரியாமல் பலரும் விமர்சிக்கிறார்கள். ஆனால் என்னுடைய அறிவு முதிர்ச்சி, அனைத்திற்கும் மரியதையுடன் பதில் அளிக்க கற்றுக் கொடுத்துள்ளது. எல்லா குடும்பத்திற்கும் உள்ளிருந்தும் வெளியிருந்தும் பிரச்னைகள் வந்து கொண்டேதான் இருக்கின்றன. அவற்றை எல்லாம் ஒன்றாக இணைந்தே எதிர்கொண்டு அதிலிருந்து வெளிவர வேண்டும், ஒற்றுமையே பலம்.

மாதம்பட்டிக்கு ஆதரவு: வெளிநபர் வந்து சட்டப்பூர்வமான மனைவியை விரட்ட பல முயற்சிகளை செய்யும்போது, அதை அப்படியே விட்டுவிடாதீர்கள். வலிமை, கண்ணியம் மற்றும் மன உறுதியுடன் இருக்கும் சட்டப்பூர்வமான மனைவிகளைப் போல நானும் இந்த பிரச்னையை எதிர்கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார். இவரது இந்த பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும், தனது கணவர் மாதம்பட்டி ரங்கராஜ்க்கு ஆதரவாகத்தான் இவரும் கருத்து தெரிவித்துள்ளார் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X