மாதம்பட்டி ரங்கராஜிடம் ஜீவனாம்சம் கேட்ட ஜாய் கிரிஸில்டா.. ஆத்தாடி மாதம் இத்தனை லட்சமா?
சென்னை: மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா புகார் அளித்ததை அடுத்து இரண்டு பேரிடமும் சமீபத்தில் மகளிர் ஆணையத்தில் விசாரணை நடைபெற்றது. இந்த விவகாரம்தான் கடந்த சில மாதங்களாக கோலிவுட்டில் ஹாட் டாபிக்காக இருக்கிறது. இந்நிலையில் மாத செலவுக்கு மாதம்பட்டி ரங்கராஜ் தனக்கு பணம் தர வேண்டும் என ஜாய் கிரிஸில்டா மனுத்தாக்கல் செய்திருக்கிறார்.
சமையல் கலைஞரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்ருதியை திருமணம் செய்து இரண்டு குழந்தைகளுக்கு தந்தையாக இருக்கிறார். ஆனால் அவருக்கும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவுக்கும் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறி திருமணத்தில் முடிந்தது. அந்தத் திருமணம் தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி மாதம்பட்டிக்கு கண்டனங்கள் பலமாக எழுந்தன. விவாகர்த்து செய்யாமலேயே இரண்டாவது திருமணத்தை அவர் செய்திருந்தார்.
ஜாய் கொடுத்த புகார்: திருமணம் செய்து ஜாயை கர்ப்பமாக்கிவிட்டு அவரிடமிருந்து விலக ஆரம்பித்தார் ரங்கராஜ். இதனால் கொதிப்படைந்த கிரிஸில்டா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தி புகார் கொடுத்தார். மேலும் அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென முதலமைச்சர் மு.க. ஸ்டாலினையும் எக்ஸ் பக்கத்தில் Tag செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற செயல்களால் இந்த விவகாரம் பற்றிக்கொண்டு எரிய ஆரம்பித்தது.

நடந்த விசாரணை: முதலில் இந்த விஷயத்தில் மாதம்பட்டி மௌனமே காத்துவந்தார். இனியும் மௌனம் காத்துவந்தால் சரியாக இருக்காது என முடிவு செய்து நீண்ட அறிக்கையை வெளியிட்டார். இது ஒருபக்கம் இருக்க சமீபத்தில் மகளிர் ஆணையத்தில் இரண்டு பேரும் விசாரணைக்கு ஆஜரானார்கள். பெரிய ட்விஸ்டாக அந்த விசாரணைக்கு முதல் மனைவி ஸ்ருதியுடன் வந்திருந்தார் ரங்கராஜ். ஸ்ருதி அடிப்படையில் ஒரு வழக்கறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது.
விசாரணையில் என்ன நடந்தது?: அந்த விசாரணையில் இரண்டு பேரிடமும் பல கேள்விகளை அதிகாரிகள் கேட்டதாக சொல்லப்படுகிறது. மேலும் விசாரணையின்போது ரங்கராஜ் தன்னிடம் பேசியதாகவும் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டிருந்தார் ஜாய். அடுத்தக்கட்ட விசாரணை விரைவில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்திருக்கிறார் ஜாய் கிரிஸில்டா.
என்ன மனு?: அந்த மனுவில், "நான் இப்போது நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதால் ஆடை வடிவமைப்பில் ஈடுபட முடியவில்லை. என்னுடைய வயற்றில் வளர்ந்திருக்கும் குழந்தைக்கு ரங்கராஜ்தான் தந்தை. ஏழு மாத கர்ப்பிணியாக நான் இருக்கிறேன். எனவே மருத்துவ செலவு, வீட்டு வாடகை, இதர செலவுகளுக்காக அவர் எனக்கு மாதா மாதம் 6.50 லட்சம் ரூபாய் பராமரிப்பு செலவு கொடுக்க உத்தரவிட வேண்டும்" என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவிருக்கிறது.
மாதம்பட்டியின் அறிக்கை: முன்னதாக மாதம்பட்டி ரங்கராஜ் வெளியிட்டிருந்த அறிக்கையில், "அனைவருக்கும் வணக்கம், நீதிமன்றத்திற்கு வெளியே திருமதி ஜாய் கிரிசில்டா எழுப்பிய தற்போதைய சர்ச்சையைத் தீர்த்து வைக்குமாறு பல நபர்கள் என்னை அணுகி வருகின்றனர். நீதித்துறை செயல்பாட்டில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது என்பதையும், சட்டத்தின்படி உண்மை நிலைநாட்டப்படும். இந்த சர்ச்சையைத் தீர்க்க நான் மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளேன் என்பதையும் திட்டவட்டமாகக் கூற விரும்புகிறேன்.
இந்தப் பிரச்னை தொடர்பான எந்தவொரு ஊடக விசாரணையிலோ அல்லது பொது விவாதத்திலோ ஈடுபடவோ, ஊக்குவிக்கவோ அல்லது பதிலளிக்கவோ நான் விரும்பவில்லை. ஆன்லைன் ஊடகங்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. நடந்து வரும் சர்ச்சை குறித்து எந்த கருத்துகளையும், அனுமானங்களையும் வெளியிடுவதைத் தவிர்க்குமாறு அனைத்து ஊடக நிறுவனங்களையும் நான் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
நான் இந்த சர்ச்சையை சட்டத்தின்படி எதிர்கொள்வேன். ஜாய் கிரிசில்டா எதிர்பார்ப்பது போல் நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வு காண ஒப்புக்கொள்ள மாட்டேன். எனது நலனில் அக்கறை காட்டி, எனக்கு உறுதுணையாக இருந்து, ஆதரவு மற்றும் பிரார்த்தனைகள் வழங்கிய அனைத்து நலன்விரும்பிகளுக்கும், எனது இதயபூர்வமான நன்றி" என்று குறிப்பிட்டிருந்தார்.


Click it and Unblock the Notifications











