குற்ற உணர்ச்சியே இல்லையா? குழந்தைக்காக எந்த எல்லைக்கும் போவேன்.. ஜாய் கிரிஸில்டா கண்ணீர் பேட்டி!

சென்னை: தன்னை பற்றி அவதூறு கருத்துகள் தெரிவிக்க ஜாய் கிரிஸில்டாவுக்கு தடை விதிக்கக் கோரி மாதம்பட்டி ரங்கராஜ் உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். இந்த வழக்கில் ஆஜராக வந்த ஜாய் கிரிஸில்டா, என் குழந்தைக்காகத்தான் போராடிக்கொண்டு இருக்கிறார். அந்த குழந்தைக்கு நீதி கிடைக்க எந்த எல்லைக்கும் செல்வேன் என கண்ணீருடன் பேட்டி அளித்துள்ளார்.

சமையல் கலை நிபுணர் மாதம்பட்டி ரங்கராஜ், தன்னைப் பற்றி அவதூறு கருத்துகள் தெரிவிப்பதைத் தடுக்கவும், அவதூறாக வெளியிடப்பட்ட வீடியோக்களை நீக்க உத்தரவிடவும் கோரிசென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதேபோல், மாதம்பட்டி ரங்கராஜ் பங்குதாரராக இருக்கும் "மாதம்பட்டி தங்கவேலு பிரைவேட் லிமிடெட்" நிறுவனத்தை தொடர்புபடுத்தி ஜாய் கிரிஸில்டா பேசியதால், அந்நிறுவனத்திற்கு 15 நாட்களில் ரூ.12.5 கோடி இழப்பு ஏற்பட்டதாகக் கூறி மற்றொரு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

Madhampatty Rangaraj Joy Crizildaa press Meet

ஜாய் கிரிஸில்டா பேட்டி: இந்த வழக்குகள் இன்று சென்னை நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தன. இரு தரப்பினரின் வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கின் விசாரணையைவரும் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார். இந்த வழக்கிற்காக ஆஜராஜ ஜாய் கிரிஸில்டா நீதிபதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அதில், மாதம்பட்டி ரங்கராஜ் என் மீது வழக்கு தொடர்ந்து இருக்கிறார். நான் அவதூறானா, பொய்யான தகவல்களை பரப்புவதாக கூறியிருக்கிறார். நான் எந்த பொய்யான அவதூறான தகவலையும் பரப்பவில்லை. இப்பொழுதும் என்னுடைய குழந்தைக்கு ஒரு நீதி வேண்டும் என்பதற்காகத்தான் போராடிக் கொண்டு இருக்கிறேன். அதே குழந்தைக்காக எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்வேன்.

பணம் இருந்தா தவறு செய்யலாமா: உயிர் இல்லாத பணத்திற்காக இன்று வழக்கு தொடர்ந்து இருக்கிறார். ஆனால், உயிருள்ள எனக்கும், குழந்தைக்கும் இதுவரை அவர் பதில் சொல்லவில்லை. இன்னைக்கு என்னையும், குழந்தையையும் நீதிமன்ற வாசலில் நிற்க வைத்து விட்டார். 20 நாட்களுக்கு முன் நான் கமிஷனர் அலுவலகத்தில் அவர் மீது புகார் கொடுத்தேன். ஆனால், இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. காசு, பணம் இருந்தால் எது வேண்டுமானாலும் செய்யலாம், தவறு செய்துவிட்டு தப்பித்துக் கொள்ளலாம் என நினைக்கிறார்கள்.

இதுவரை விசாரணை இல்லை: எம்.ஆர்.சி நகர் காவல் நிலையத்திலிருந்து எனக்கு ஃபோன் செய்து இந்த வழக்கு எங்களுடைய ஸ்டேஷனுக்குள் வராது ஆகையால் இந்த வழக்கை அடையாருக்கு மாற்றுகிறோம் என்கின்றனர். அடையாறு ஸ்டேஷன்ல இருந்து இந்த வழக்கு எங்கள் ஸ்டேஷன் லிமிட்டுக்கு வராது திருவான்மியூருக்கு மாற்றுகிறோம் என்கின்றனர். இப்பொழுது என் வழக்கு எந்த காவல் நிலையத்தில் இருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை. தற்போது வரை என்னுடைய குழந்தைக்கு அவர் பதில் சொல்லவில்லை. அதற்காகத்தான் நான் இப்போது போராடிக் கொண்டிருக்கிறேன்.

மோசமாக பேசுகிறார்கள்: நான் போட்ட வீடியோவை டெலிட் செய்ய சொல்லி இருக்கிறார்கள். நான் எந்த தவறான தகவல்களை என்னுடைய சோசியல் மீடியாவில் பகிரவில்லை. என்னுடைய வயிற்றில் வளரும் குழந்தைக்கு மாதம்பட்டி தான் தந்தை, அதைத்தான் நான் பதிவிட்டிருந்தேன். தவறு செய்தவர்கள் ஜாலியாக வெளியில் இருக்கிறார்கள். ஆனால், தவறு செய்தவர்களை தட்டிக்கேட்கும் பெண்ணை இந்த சமூதாயம் அவமானப்படுத்துகிறது. பல youtube சேனல்களில் என்னை பற்றி மோசமாக பேசுகிறார்கள். அதை யார் சொல்லி இப்படி பேசுகிறார்கள் என்பது எனக்கு நன்றாக தெரியும். ஒரு பெண்ணை பற்ற தவறாக பேசுவர்கள் வீட்டிலும் அம்மா, அக்கா, தங்கை மனைவி என பெண்கள் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். இப்படி அவமானப்படுத்துவதால் தான் பல பெண்கள் துணிந்து வந்து எந்த விஷயத்தையும் வெளியில் சொல்வதே இல்லை என ஜாய் கிரிஸில்டா கண்கலங்கி பேசினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X