Joy Crizildaa: என் கிட்ட பேசுனாரு.. வசமா சிக்கப்போகும் ரங்கராஜ்.. ஜாய் கிரிஸில்டா பேட்டி!
சென்னை: மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றி விட்டதாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா கடந்த சில மாதங்களுக்கு முன் போலீஸில் புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக சமூக வலைதளங்களில் பதிவிட்ட ஜாய் கிரிசில்டா, தொடர்ந்து தனக்கு நீதி வேண்டும், தன்னுடைய குழந்தைக்கு அவர் தான் அப்பா என முறையிட்டு வருகிறார். இதையடுத்து, பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை ஆணையர் அலுவலகத்தில் ஜாய் கிரிஸில்டா ஆஜராகி புகைப்படங்கள், செல்போன் உரையாடல் அனைத்தையும் கொடுத்து அதிகாரிகள் கேட்ட கேள்விக்கு விளக்கம் கொடுத்தார்.

இதையடுத்து, இன்று சேப்பாக்கத்தில் உள்ள மாநில மகளிர் ஆணையத்தில் இரண்டாவது முறையாக விசாரணைக்கு ஆஜரான ஜாய் கிரிஸில்டா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, இன்னும் விசாரணை முடியவில்லை விசாரணை தொடர்ந்து போய்க்கொண்டு தான் இருக்கிறது. வெள்ளிக்கிழமை இரண்டு பேரையும் வர சொல்லி இருக்கிறார்கள். அன்று தான் இறுதியாக என்ன நடக்கப் போகிறது என்பது தெரியும். நான் முதலில் எந்த முடிவில் இருந்தோனோ தற்போதும் அதே முடிவில் தான் இருக்கிறேன். வெள்ளிக்கிழமை எல்லாம் தெரிந்து விடும் தெரிந்த பிறகு நான் மீடியாவிற்கு நேரடியாக அனைத்தையும் சொல்கிறேன். இன்று இருவரிடம் தான் விசாரணை நடத்தினார்கள் அப்போது, மாதம்பட்டி ரங்கராஜ் என்னிடம் பேசினார். அவர் என்ன பேசினார் என்பதை என்னால் இப்பொழுது சொல்ல முடியாது இறுதியாக விசாரணை நடந்து முடிந்த பிறகு, வெள்ளிக்கிழமை அனைத்தையும் உங்களிடம் சொல்கிறேன் அதுவரையும் காத்திருங்கள் என்றார்.
ரங்கராஜ் என்னிடம் பேசினார்: அதைத்தொடர்ந்து பேசிய ஜாய் கிரிஸில்டா எல்லா பெண்களுக்கும் நான் சொல்லிக் கொள்ளும் ஒரே விஷயம் என்னவென்றால், உங்களுக்கு எந்த வகையான பிரச்சனையாக இருந்தாலும், பெண்கள் ஆணையத்திற்கு வரலாம், நான் பல இடத்தில் புகார் கொடுத்து கொடுத்து இருந்தேன். அதன் பிறகு தான் இங்கு புகார் கொடுத்தேன். நான் புகார் கொடுத்ததுமே உடனடியாக நடவடிக்கை எடுத்தார்கள். இதனால் பெண்களுக்கு எந்த ஒரு பாதிப்பு, பிரச்சனையாக இருந்தாலும் மாநில மகளிர் ஆணையத்தில் புகார் கொடுக்கலாம் என்றார். இதைத்தொடர்ந்து செய்தியாளர் ஒருவர், முதலில் நீங்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தீர்கள். அதில் காலதாமதம் ஏற்பட்டதாக சொல்லி இருந்தீர்கள், அதற்கு காரணம் அரசியல் தலையீடு இருந்ததா என கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த ஜாய் கிரிஸில்டா இருக்கலாம் என பதில் அளித்தார்.


Click it and Unblock the Notifications











