Madhampatty Rangaraj: நச்சரிப்பு தாங்க முடியல.. நான் ஜாய் கிரிசில்டா மாதிரி இல்லை.. விளாசி விட்ட மாதம்பட்டி
சென்னை: நடிகரும் சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட ஜாய் கிரிசில்டா விவகாரம் கடந்த சில மாதங்களாகவே பேசு பொருளாக உள்ளது. தனது முதல் மனைவியை விவாகரத்து செய்யாமலே, இரண்டாவது திருமணம் செய்து கொண்ட மாதம்பட்டி ரங்கராஜின் இந்த செயல் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. இது மட்டும் இல்லாமல், ஜாய் கிரிசில்டா தற்போது ஏழு மாத கர்ப்பிணியாக இருப்பது மேலும் அதிர்ச்சி.
இப்படி இருக்கையில் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை காதலித்து திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாகவும் தற்போது தான் கர்ப்பமாக இருப்பதாகவும், எனது வயிற்றில் வளரும் குழந்தைக்கு அவர்தான் தகப்பன் என்றும் தெரிவித்தார். அதன் பின்னர் சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்தார். பல ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார். அவ்வப்போது மாதம்பட்டி ரங்கராஜுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள், வீடியோக்களையும் வெளியிட்டார். இது மேலும் மேலும் சர்ச்சையைக் கிளப்பியது. முதலமைச்சர் ஸ்டாலினை டேக் செய்து அப்பா எனக்கு நியாயம் வாங்கி கொடுங்கள் என்று பதிவிட்டிருந்தார் ஜாய் கிரிசில்டா. இவரது இந்த செயல்கள் எல்லாம் இவர்களின் விவகாரத்தின் மீது பெரும் கவனத்தை ஈர்த்துவிட்டது.

அதன் பின்னர் இருவரிடமும் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு துணை கமிஷ்னர் அலுவகலத்தில் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை, ஒரு புறம் நடக்க, மாதம்பட்டி ரங்கராஜ் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அந்த வழக்கு விசாரணையும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாதம்பட்டி ரங்கராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
நான் அப்படி இல்லை: அதாவது, " நீதிமன்றத்திற்கு வெளியே, ஜாய் கிரிசில்டா எழுப்பிய தற்போதைய சர்ச்சையைத் தீர்த்து வைக்குமாறு பல நபர்கள் என்னை அணுகி வருகின்றனர். நீதித்துறை செயல்பாட்டில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது என்பதையும், சட்டத்தின்படி உண்மை நிலைநாட்டப்படும். இந்த சர்ச்சையைத் தீர்க்க நான் மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளேன் என்பதையும் திட்டவட்டமாகக் கூற விரும்புகிறேன்.
விருப்பம் இல்லை: இந்தப் பிரச்சினை தொடர்பான எந்தவொரு ஊடக விசாரணையிலோ அல்லது பொது விவாதத்திலோ ஈடுபடவோ, ஊக்குவிக்கவே அல்லது பதிலளிக்கவோ நான் விரும்பவில்லை. ஆன்லைன் ஊடகங்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. நடந்து வரும் சர்ச்சை குறித்து எந்த கருத்துகளையும், அனுமானங்களையும் வெளியிடுவதை தவிர்க்குமாறு அனைத்து ஊடக நிறுவனங்களையும் நான் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

கமெண்ட்: நான் இந்த சர்ச்சையை சட்டத்தின்படி எதிர்கொள்வேன். ஜாய் கிரிசில்டா எதிர்பார்ப்பது போல் நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வு காண ஒப்புக்கொள்ள மாட்டேன். எனது நலனில் அக்கறை காட்டி, எனக்கு உறுதுணையாக இருந்து, ஆதரவு மற்றும் பிரார்த்தனைகள் வழங்கிய அனைத்து நலன் விரும்பிகளுக்கும், எனது இதயபூர்வமான நன்றி" என்று குறிப்பிட்டுள்ளார். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இணையவாசிகள் தொடங்கி ரசிகர்கள் வரை பலரும் மாதம்பட்டி ரங்கராஜ்க்கு ஆதரவாகவும் எதிராகவும் தங்களது சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகிறர்கள். ஆனால் மாதம்பட்டி ரங்கராஜ் தனது இந்த போஸ்ட்க்கான கமெண்ட் செக்ஷனை ஆஃப் செய்து வைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











