பாவம் ரொம்ப நொந்து போய் இருக்காங்க.. மாதம்பட்டி ரங்கராஜ் மனைவி ஸ்ருதியின் பதிவு!

சென்னை: சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ் திருமணம் செய்து கொண்டு, தன்னை கர்ப்பமாக்கி விட்டு ஏமாற்றி சென்று விட்டதாக ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளர். இதன் மீதான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், கடந்த 31 ந் தேதி ஜாய்க்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்தது பற்றி, ஜாய் instagram பக்கத்தில் ஏதாவது ஒரு கருத்தை பகிர்ந்து வரும் நிலையில் மாதம்பட்டி ரங்கராஜின் மனைவி சுருதி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவினை போட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

மாதம்பட்டி ரங்கராஜ் மெஹந்தி சர்க்கஸ் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து அரசியல் பிரபலங்களின் வீட்டு விசேஷத்திற்கும், நடிகர்களின் வீட்டு விசேஷ நிகழ்ச்சிக்கும் இவரின் கேட்டரிங் சர்வீஸ் உணவே பரிமாறப்பட்டு, அனைவரும் இவரது கேட்டரிங் சர்வீசை வியந்து பாராட்டி வருகிறார்கள். இதைத்தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் நடுவராக கலந்து கொண்டார்.

Madhampatty Rangaraj shruthi Rangaraj Joy Crizildaa
Photo Credit:

மாதம்பட்டி ரங்கராஜ்: இந்த நேரத்தில் ஜாய் கிரிஸில்டா தனது இன்ஸ்டாகிராமில், மாதம்பட்டி ரங்கராஜை திருமணம் செய்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். ரங்கராஜுக்கு ஏற்கனவே சுருதி என்ற மனைவியும் இரண்டு மகன்களும் இருக்கும்போது அவரை விவகாரத்து செய்யாமல் மாதம்பட்டி எப்படி இரண்டாவது திருமணம் செய்து கொள்வார் என பலவிதமான கருத்துக்கள் இணையத்தில் பரவியது.'

ஆண் குழந்தை பிறந்தது: இதைத்தொடர்ந்து ஜாய் கிரிஸில்டா மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாகவும், ஆறு மாத காலம் கர்ப்பமாக இருக்கும் என்னை ஏமாற்றிவிட்டு சென்றுவிட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்தார். இது தொடர்பான வழக்கு நடைபெற்று வந்த நிலையில், கடந்த 31ந் தேதி ஜாய்க்கு ஆண் குழந்தை பிறந்தது. ஆண் குழந்தை பிறந்ததை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருந்தார். அது மட்டுமல்லாமல் தொடர்ந்து, குழந்தை மாதம்பட்டி சாயலில் இருப்பதாகவும், குழந்தையை பார்க்காத அப்பா என தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் ஏதாவது ஒன்றை ஜாய் பகிர்ந்து வருகிறார்.

ஸ்ருதியின் பதிவு: இந்நிலையில் மாதம்பட்டி ரங்கராஜன் மனைவி ஸ்ருதி தற்போது ஒரு பதிவினை போட்டு உள்ளார். அந்தப் பதிவில் எல்லா தடைகளையும் தாண்டி, உன் கனவுகளை நோக்கி பற என ஊக்கமளிக்கும் வகையில் ஒரு பதிவினை போட்டு இருக்கிறார். இந்த விவகாரம் குறித்து எந்தவிதமான கருத்தையும் தெரிவிக்காமல் அமைதியாக இருந்த ஸ்ருதியின் ஊக்கமளிக்கும் பதிவினைப்பார்த்த இணையவாசிகள், ஸ்ருதி உண்மையில் மனதளவில் பாதிக்கப்பட்டு இருப்பார். எந்த பெண்ணுக்கும் இப்படி ஒரு நிலைமை வரக்கூடாது ரொம்ப பாவம் ஸ்ருதி என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X