இன்னும் சில வாரங்கள்தான்.. எதிர்பார்ப்பில் ஜாய் கிரிஸில்டா.. என்ன செய்யப்போகிறார் மாதம்பட்டி ரங்கராஜ்?
சென்னை: பிரபல ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டா சில மாதங்களுக்கு முன்பு தனக்கும், மாதம்பட்டி ரங்கராஜுக்கும் இடையே நடந்த இரண்டாவது திருமணம் தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டார். அதுமட்டுமின்றி இருவரும் முத்தம் கொடுத்துக்கொண்ட வீடியோக்களும் வெளியாகின. அதேசமயம் அவர் தன்னை ஏமாற்றிவிட்டார் என்றும் ஜாய் புகார் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
ஜில்லா, வேலைக்காரன், மெர்சல் உள்ளிட்ட படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியவர் ஜாய் கிரிஸில்டா. இவருக்கும் பொன்மகள் வந்தாள் படத்தின் இயக்குநர் ஃபெட்ரிக்கிற்கும் ஏற்கனவே திருமணம் நடந்து முடிந்திருந்தது. ஆனால் அவர்களது திருமண வாழ்க்கை பாதியில் முடிந்தது. அதற்கு பிறகு சில காலம் சிங்கிளாக இருந்த அவர்; பிரபல சமையல் கலைஞரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜுடன் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டார்.
நட்பு டூ காதல்: ஆரம்பத்தில் இரண்டு பேருமே நட்பாகத்தான் பழகியிருக்கிறார்கள். ஏற்கனவே மாதம்பட்டிக்கும் திருமணம் முடிந்திருந்தது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் இரண்டு பேருக்குமான நட்பு காதலாக மாறியிருக்கிறது. அந்தக் காதலை திருமண பந்தத்திலும் கொண்டு சேர்த்தார்கள் இருவரும். அவர்களுக்கு நடந்த திருமணம் குறித்து முதலில் வெளியே யாருக்கும் தெரியவில்லை. அதனை ஜாய்தான் வெளிப்படுத்தினார்.

புகார் கொடுத்த கிரிஸில்டா: திருமணம் ஆனது மட்டுமின்றி தான் கர்ப்பமாக இருப்பதாகவும் அறிவித்தார் அவர். அவரது அறிவிப்பு கோலிவுட்டில் பெரும் புயலை கிளப்பியது. அதிலும் முதல் திருமணம் செய்த ஸ்ருதியை விவாகரத்து எதுவும் செய்யாமலேயே ரங்கராஜ் ஜாய் கிரிஸில்டாவை இரண்டாவது திருமணம் செய்துகொண்டதும் தெரியவந்தது. நிலைமை இப்படி செல்ல; திடீரென சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார் ஜாய்.
புகாரும் விசாரணையும்: அந்தப் புகாரில், 'மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டார். என்னுடைய வயிற்றில் வளரும் குழந்தைக்கு ரங்கராஜ்தான் பொறுப்பு' என்றும் கூறினார். அவரது புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்தப் புகாரின் அடிப்படையில் ஜாய் கிரிஸில்டாவிடம் சில நாட்களுக்கு முன்பு ஆறு மணி நேரம் விசாரணை நடந்தது. விரைவில் மாதம்பட்டியாரிடமும் விசாரணை நடக்கவிருக்கிறது.
இன்னும் சில வாரங்கள்தான்: ரங்கராஜும் ஜாய் கிரிஸில்டா மீது அவதூறு வழக்கு தொடர்ந்திருக்கிறார். இருப்பினும் தங்கள் தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்களை தொடர்ந்து பதிவிடும் ஜாய், இப்போது புதிய போஸ்ட்டை இன்ஸ்டாகிராமில் போட்டிருக்கிறார். அதாவது, தன்னுடைய புகைப்படத்தை போட்டு, இன்னும் சில வாரங்கள்தான்.மாதம்பட்டி ராகா ரங்கராஜ் வரப்போகிறார் எனு குறிப்பிட்டிருக்கிறார். தங்களுக்கு பிறக்கும் குழந்தை பெண் குழந்தையாக வேண்டும் என்று ரங்கராஜ் ஆசைப்பட்டதாகவும்; குழந்தைக்கு பெயர் ராகா என்று அவர் ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஒருபக்கம் காவல் துறையில் புகார், ஜாய் கிரிஸில்டாவின் பதிவுகள் என நெருக்கடியை சந்திக்கும் ரங்கராஜ்; இன்னும் சில வாரங்களில் பிறக்கப்போகும் குழந்தை விஷயத்தில் என்ன செய்யப்போகிறார் என்ற கேள்வியையும் ரசிகர்கள் வைக்க தொடங்கியிருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











