twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'ரோஜா பூ ஒன்று ராஜாவின் கைசேர'... இளையராஜாவுக்கும் வைரமுத்துவுக்கும் ஒரு பாட்டு!

    By Shankar
    |

    Madhan Karki dedicates a song for Ilayarajaa, Vairamuthu
    சென்னை: தமிழ் சினிமாவின் சாதனை இசையமைப்பாளர் இளையராஜாவுக்கும், முன்னிலை பாடலாசிரியர் வைரமுத்துவுக்கும் ஒரு பாடலை சமர்ப்பணம் செய்துள்ளார் மதன் கார்க்கி.

    'தமிழ்ப்படம்' திரைப் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு சி.எஸ்.அமுதன் ரெண்டாவது படம் என்ற தலைப்பில் புதிய படம் இயக்குகிறார்.

    இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சத்யம் திரையரங்கில் நேற்று நடந்தது.

    அதில் 'ரோஜா பூ ஒன்று ராஜாவின் கைசேர... வானம் செந்தூரம் சூடும்' என்ற பாடல் இடம்பெற்றுள்ளது.

    80-களில் வெளிவந்த பாடல்களின் பாணியில் உருவாக்கப்பட்டுள்ள பாடல் இது. இளையராஜாவும்- வைரமுத்துவும் இணைந்து 80-களில் இணையற்ற பல பாடல்களைக் கொடுத்திருக்கிறார்கள். அவர்களுக்குப் பின் அந்த ஸ்டைலில் யாராலும் பாடல்களை கொடுக்க முடியவில்லை என்ற குறை இப்போது தமிழ் சினிமாவில் இருப்பதை உணர்ந்தே அமுதன் இந்த பாடலை எழுதச் சொன்னாராம்.

    இந்த ரோஜா பூ பாடலை பாடலாசிரியர் மதன் கார்க்கி எழுதியிருக்கிறார். 80-களின் ஸ்டைலில் பாடல் எழுதிய அனுபவம் பற்றி பேசிய மதன் கார்க்கி, "80-களின் ஸ்டைலில் பாடல் எழுதியது எனக்கு சவாலாக இருந்தது. நான் சிறிய வயதிலிருந்தே இளையராஜா -வைரமுத்து இணைந்து உருவாக்கிய பாடல்களைக் கண்டு வியந்திருக்கிறேன். இந்தப் பாடலை எஸ்.பி.பி - சித்ரா பாடியிருக்கிறார்கள். நான் எழுதிய வரிகளை முதல்முதலாக இருவரும் பாடுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தப் பாடலை இளையராஜாவுக்கும், வைரமுத்துவுக்கும் சமர்ப்பணம் செய்கிறேன்," என்று கூறினார்.

    ரோஜா பூ - பாடல் வரிகள்...

    குழு - மயில் தோகை கொண்டே
    விசிறி தோழன் ஒருவன் மயங்கிவிட்டானே
    காதல் மதுவை அருந்தி...
    திருக்கோவில் தீபம் எனவே
    தோழி கைத்தலம் பிடிக்க வந்தாலே
    தீயில் ஒளியாய் பொருந்தி...
    கடல் சேரும் நீலம் எனவே
    இசை சேரும் தாளம் எனவே
    மகிழ்வோடு காலம் முழுதும் வாழ்கவே!

    பல்லவி

    ஆண் - ரோஜா பூ ஒன்று... ராஜாவின் கைசேர...
    வானம் செந்தூரம் சூடும்
    மாலை நிலவும் உன் போலே எழுந்து
    மேகம் அணிந்து பாடும்
    மாயம் புரிந்தாய்...
    காற்றாய் நிறைந்தாய்...

    குழு - உனக்கே பிறந்தாள்
    இதயம் திறந்தாள்
    நிலவாய் உன்னில் உதித்தாள்
    காதல் தடம் பதித்தாள்

    சரணம் - 1

    ஆண் - தானாய் வந்ததொரு நந்தவனம்
    என் சொந்தவனம்
    பெண் - நீதான் காலமெங்கும் என் வசந்தம்
    ஒரு பொன்வசந்தம்
    ஆண் - தேன் மழை பொழியவா
    பெண் - நான் அதில் நனையவா
    ஆண் - உயிரே... உயிரில் இணையவா...

    சரணம் - 2

    பெண் - காமன் கோயிலுக்குள் போக மேடை
    அதில் ராஜ பூஜை
    ஆண் - மாமன் கைகளுக்குள் நூறு வித்தை
    நீ பஞ்சு மெத்தை
    பெண் - வேர்வையில் குளிக்கலாம்
    ஆண் - பார்வையில் துடைக்கலாம்
    பெண் - உறவே இரவை படிக்கலாம்

    English summary
    Madhan Karki has dedicate his new song to Maestro Ilayaraja and Poet Vairamuthu
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X