»   »  33 படங்களுக்கு 82 பாடல்கள் எழுதிய மதன் கார்க்கி!

33 படங்களுக்கு 82 பாடல்கள் எழுதிய மதன் கார்க்கி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பாடலாசிரியர் மதன் கார்க்கி 2014ஆம் ஆண்டில் 33 படங்களில் 82 பாடல்களை எழுதியுள்ளார். இதில் 67 பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தந்தையை மிஞ்சிய தனையன் என்பார்கள். கவிப்பேரரசு வைரமுத்துவின் மகன் மதன் கார்க்கியும் தனது அப்பாவை மிஞ்சிவிட்டார் என்கின்றனர். இந்த ஆண்டு எழுதியுள்ள 82 பாடல்களே இதற்கு சாட்சி என்கின்றனர்.

நா.முத்துகுமார்தான் வருடந்தோறும் அதிகமான பாடல்களை எழுதுவார். இப்போது அவருக்கு போட்டியாக மதன் கார்க்கியும் வந்திருக்கிறார். இந்த ஆண்டு 82 பாடல்களை எழுதியுள்ளார் மதன் கார்க்கி.

Madhan Karky pens 82 songs in 2014

அவற்றில் யாரோ யார் அவள்(அரிமா நம்பி), வாசம் மோக்கா(வாலு), ஹனியே(ஆஹா கல்யாணம்), நெகிழி(நிமிர்ந்து நில்), மாஞ்சா(மான்கராத்தே), நீ என்ன பெரிய அப்பாடக்கரா(என்னமோ ஏதோ), டக்கு டக்கு(சிகரம் தொடு), பேங் பேங்(அஞ்சான்), முன்னே என் முன்னே(சதுரங்க வேட்டை), சரிதானா... (அமரகாவியம்), எனை மறுபடி மறுபடி(நண்பேன்டா), பச்சை வண்ணப் பூவே(வை ராஜா வை), இசை லீஸி(இசை), காதல் கஸாட்டா(கப்பல்), செல்ஃபி புள்ள(கத்தி), பூக்களே(ஐ), ஒருத்தி மேல(ஜீவா), ஏன் இங்கு வந்தான்(மீகாமன்), என் நெஞ்சில்(நாய்கள் ஜாக்கிரதை), மோனோ கேஸலீனா(லிங்கா)", போன்ற பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி உள்ளனவாம்.

இது குறித்து பேசிய மதன் கார்க்கி, "திரையுலகில் ஓர் எழுத்தாளனாக நான் அடியெடுத்து வைத்து ஐந்தாண்டுகள் நிறைவுறுகிறது. என் இந்தப் பயணம் தொடங்கிய நான் முதல் இன்றுவரை பத்திரிகையாளர்கள் கொடுத்து வரும் ஊக்கத்திற்கும், விமர்சனங்களுக்கும் நன்றி என்று கூறியுள்ளார்.

எனக்கு சூழலும், சுதந்திரமும் தந்த என் இயக்குனர்களுக்கும், என் வரிகளுக்கு உருவம் தந்த இசை அமைப்பாளர்களுக்கும், பாடகர்களுக்கும், வாய்ப்பளித்த தயாரிப்பாளர்களுக்கும் என் நன்றி. இன்னும் அழகான, தரமான பாடல்களோடு வரும் ஆண்டும் அமையும் என்று நம்புகிறேன்.." என்று கூறியுள்ளார் மதன் கார்க்கி.

English summary
Madhan Karky ,the young lyricist & son of Mr Vairamuthu has penned 82 songs in this calendar year for 33 films.Known to be a writer who uses a lot of technical words in his poems.
Please Wait while comments are loading...