»   »  வைரமுத்து மீதான இளையராஜாவின் கோபம் அடுத்த தலைமுறையிலும் தொடர்கிறது!- மதன் கார்க்கி

வைரமுத்து மீதான இளையராஜாவின் கோபம் அடுத்த தலைமுறையிலும் தொடர்கிறது!- மதன் கார்க்கி

Posted By:
Subscribe to Oneindia Tamil

தன் அப்பா வைரமுத்து மீதான இளையராஜாவின் கோபம் அடுத்த தலைமுறையிலும் தொடர்வதாக பாடலாசிரியர் மதன் கார்க்கி தெரிவித்துள்ளார்.

ஒரு பேட்டியில், இளையராஜாவுடன் எப்போது பணியாற்றப் போகிறீர்கள் என்ற கேள்விக்கு மதன் கார்க்கி கூறுகையில், "நான் அவருடன் இணைந்து பணியாற்றுவதில் ஆர்வமாகத்தான் இருக்கிறேன். ஆனால், அப்பா (வைரமுத்து) மீது ராஜா சாருக்கு உள்ள கோபம் அடுத்த தலைமுறை வரைக்கும் இருக்கிறது", என்று கூறியுள்ளார்.

Madhan Karky speaks Ilaiyaraaja - Vairamuthu rivalry

இளையராஜா - வைரமுத்து இணை காலத்தை வென்ற பல பாடல்களைத் தந்தது, எண்பதுகளில். 1987-ல் இந்த இணை பிரிந்த பிறகு, இருவரையும் மீண்டும் இணைக்க பலரும் முயன்றனர். ஆனால் நடக்கவில்லை.

இந்த நிலையில் இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா இசையில் வைரமுத்து பாடல் எழுதியுள்ளார். அந்தப் படம் இடம் பொருள் ஏவல் விரைவில் வரவிருக்கிறது.

இளையராஜா இசையில் ஒரு பாடலாவது எழுதிவிட வேண்டும் என வைரமுத்துவின் மகன்கள் இப்போது விருப்பத்தைத் தெரிவித்து வருகிறார்கள்.

English summary
Madhan Karky says that he would like to write lyrics for Ilaiyaraaja's tunes, but the rivalry between his father and Ilaiyaraaja make it impossible.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil