»   »  மதனைக் கண்டுபிடித்துத் தருமாறு அவரது தாயார், இரு மனைவிகள் புகார்!

மதனைக் கண்டுபிடித்துத் தருமாறு அவரது தாயார், இரு மனைவிகள் புகார்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வேந்தர் மூவீஸ் மதனைக் கண்டுபிடித்துத் தருமாறு அவரது தாயார் மற்றும் இரு மனைவியர் போலீசில் புகார் செய்துள்ளனர்.

தற்கொலைக் கடிதம் எழுதிவைத்துவிட்டுக் காணாமல் போயுள்ள மதன் குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். மிக இளம் வயதில் சென்னைக்கு வந்து, பாரிவேந்தருக்கு நெருக்கமாகி அவர் பெயரிலேயே தயாரிப்பு மற்றும் விநியோகத் துறையில் நுழைந்து பெரிய ஆளாகிவிட்டார்.

Madhan's wives and mother lodged complaint

மதனுக்கு மொத்தம் மூன்று மனைவிகள். இவர்களைத் தவிர ஒரு காதலியும் இருப்பதாகக் கூறப்படுகிறது.

மதன் காணாமல் போனது குறித்து பாரிவேந்தர் எந்த கவலையும் தெரிவிக்கவில்லை. மாறாக அவர் ஒரு மோசடிப் பேர்வழி, அவருக்கும் எங்கள் எஸ்ஆர்எம் குழுமத்துக்கும் தொடர்பில்லை என்று அறிக்கை விட்டுவிட்டார்.

இந்த நிலையில் அவரிடம் எஸ்ஆர்எம் அட்மிஷனுக்காக பணம் கொடுத்தவர்கள் போலீசில் புகார் செய்துள்ளனர்.

மதனின் தாயார் தங்கம் மற்றும் மனைவி சுமலதா ஆகியோர் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரனை சந்தித்து மதனை கண்டுபிடிக்கும்படி மனு கொடுத்தனர். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கும்படி கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.

மதனின் இரண்டாவது மனைவி சிந்து என்பவரும் கமிஷனர் அலுவலகத்தில் புதிய புகார் மனு கொடுத்திருப்பதாகத் தெரிகிறது.

அவரது மூன்றாவது மனைவி பெயர் அனிதா என்று கூறப்படுகிறது. ஆனால் அவர் இதுவரை காட்சியில் வரவில்லை.

English summary
Mother and two wives of Vendhar Movies Madhan have lodged complaint to police to search him.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil