Madharaasi Day 4 Box Office: மதராஸி 4ம் நாள் வசூல்.. ரெட்ரோவை முந்தினாலும் குபேராவை முந்தலயே!

சென்னை: ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ருக்மணி வசந்த், பிஜு மேனன், வித்யூத் ஜமால், ஷபீர் கல்லரக்கல், தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான மதராஸி திரைப்படம் முதல் 4 நாட்களில் ஓரளவு வசூல் வேட்டையை உலகளவில் ஈட்டியுள்ளது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்த நிலையில், திங்கட்கிழமை வசூல் சுமார் 60 சதவீதம் டிராப் ஆகிவிட்டது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் சிவகார்த்திகேயன் இணைந்து நடித்த ஹீரோ திரைப்படம் ஃபிளாப் ஆனது. ஆனால், தற்போது கல்யாணி பிரியதர்ஷன் நடித்த லோகா திரைப்படம் 150 கோடி வசூலை 2 வாரங்களில் சாத்தியமாக்கி 200 கோடிய நோக்கி நகர்கிறது.

Madharaasi Day 4 Box Office Sivakarthikeyan movie beats Retro but failed to beat Kuberaa
Photo Credit:

ஆனால், முதல் 4 நாட்களில் உலகளவில் மதராஸி திரைப்படம் 63 கோடி வசூலை மட்டுமே எட்டியூள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் டிராக்கர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

வேகம் பத்தாது: சலம்பலா பாடலில் செம ஸ்பீடாக டான்ஸ் ஆடியும் சண்டைக் காட்சிகளில் முரட்டுத்தனமாக சிவகார்த்திகேயன் சண்டை போட்டும் அதை விட டோல்கேட் சீனில் வித்யூத் ஜமால் மேட்ரிக்ஸ் ஹீரோ போல பறந்து பறந்து துப்பாக்கியை வைத்து சண்டை போட்டும் இந்த ஸ்பீடும் பாக்ஸ் ஆபீஸை நிரப்ப பத்தவில்லை என்று தான் தோன்றுகிறது. ஏ.ஆர். முருகதாஸுக்கு இந்த படம் கம்பேக் எனக் கூறப்பட்ட நிலையிலும், படத்தின் பட்ஜெட் 150 கோடி என சொல்லப்படும் நிலையில், பிரேக் ஈவனை அடையுமா? மதராஸி என்கிற கேள்வி எழுந்துள்ளது.

ரெட்ரோவை முந்தியாச்சு: மதராஸி திரைப்படம் முதல் 4 நாட்களில் சூர்யாவின் ரெட்ரோ 4 நாட்களில் செய்த சாதனையை முறியடித்து விட்டதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. ரெட்ரோ திரைப்படம் 60.75 கோடி வசூலை முதல் 4 நாட்களில் ஈட்டிய நிலையில், மதராஸி திரைப்படம் 63 கோடி வசூலை ஈட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

குபேராவை முந்தவில்லை: ஆனால், தனுஷ் நடிப்பில் வெளியான குபேரா திரைப்படம் தமிழ்நாட்டில் பெரிதாக வசூல் செய்யவில்லை என்றாலும் அதிரடியாக ஆந்திரா மற்றும் தெலங்கானாவிலேயே 100 கோடி வசூலை ஈட்டியது. அதுவும் முதல் 4 நாட்களில் 76.75 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளதாக சினி டிராக் பாக்ஸ் ஆபீஸ் தகவலை வெளியிட்டுள்ளது.

Madharaasi Day 4 Box Office Sivakarthikeyan movie beats Retro but failed to beat Kuberaa
Photo Credit:

தலைவன் தலைவி, டிராகனை முந்துமா?: சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம் 300 கோடி வசூல் செய்த நிலையில், மதராஸி திரைப்படம் குறைந்தபட்சம் 200 கோடி வசூலை ஈட்டும் என எதிர்பார்க்கப்பட்டது. 2 நாட்களில் 50 கோடி என தயாரிப்பு தரப்பும் அறிவித்த நிலையில், 4 நாட்களில் 100 கோடி வசூல் வராமல் 63 கோடி வசூல் அளவில் தடுமாறி வருகிறது. இதன் காரணமாக தலைவன் தலைவி அளவுக்கு 100 கோடி வசூலையாவது 2வது வார முடிவில் இந்த படம் எட்டுமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. மேலும், பிரதீப் ரங்கநாதனின் டிராகன் பட வசூலை எட்ட வேண்டும் என்றால் 3 வாரங்கள் தொடர்ந்து படம் ஓடினால் தான் வாய்ப்பு இருக்கு என்கின்றனர். 150 கோடி பட்ஜெட்டில் உருவான மதராஸி பாக்ஸ் ஆபீஸில் 150 கோடி வசூலை கூட பெறவில்லை என்றால் சிக்கல் தான் என்கின்றனர். திங்கட்கிழமையான நேற்று இந்தியளவில் 4 கோடி ரூபாய் வசூலை மதராஸி ஈட்டியுள்ளதாகவும் இந்தியளவில் இதுவரை 40 கோடி ரூபாய் வசூலை ஈட்டியிருப்பதாகவும் சாக்னிக் அறிவித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X