Madharaasi First Review: மதராஸி முதல் விமர்சனம்.. கிளைமேக்ஸில் வெயிட்டான விஷயம் இருக்காம்!
சென்னை: மதராஸி திரைப்படத்தை வெறுமனே ஆக்ஷன் படமாக மட்டும் எடுக்காமல் சமூக அக்கறை சார்ந்த ஒரு முக்கியமான கதையை தான் ஏ.ஆர். முருகதாஸ் படமாக மாற்றியுள்ளார் என இன்சைட் ரிப்போர்ட்டுகள் வெளியாகி உள்ளன. முருகதாஸ் இயக்கத்தில் கடைசியாக ரஜினிகாந்த் நடித்த தர்பார், சல்மான் கான் நடித்த சிக்கந்தர் உள்ளிட்ட படங்கள் போல இந்த படம் சொதப்பாது என்றும் விஜய்யின் துப்பாக்கி, கைதி படங்களை போல விறுவிறுப்பாக படம் இருக்கும் என்றும் கூறுகின்றனர்.
ஏ.ஆர். முருகதாஸ் தீனா, ரமணா, கஜினி, துப்பாக்கி, கத்தி, 7ஆம் அறிவு, சர்க்கார் உள்ளிட்ட பல படங்களை தமிழ் சினிமாவுக்கு கொடுத்துள்ளார். அந்த வரிசையில் சிவகார்த்திகேயனின் படமும் இருக்கும் என்றே இன்சைட் ரிப்போர்ட்டுகள் வெளியாகி உள்ளன.

அதிலும், கிளைமேக்ஸ் போர்ஷன் தான் மரண மாஸாக இருக்கும் என்றும் சிவகார்த்திகேயனின் பர்ஃபார்மன்ஸ் இந்த மதராஸி படத்தின் மூலம் வேறு தளத்திற்கு செல்லும் என்றும் கூறுகின்றனர்.
மதராஸி முதல் விமர்சனம்: சிவகார்த்திகேயன், ருக்மணி வசந்த், வித்யூத் ஜமால் மற்றும் பிஜு மேனன் நடித்துள்ள மதராஸி படம் முதல் பாதி முழுவதும் ரொமான்ஸ் மற்றும் காமெடி காட்சிகளுடன் ஒரு ஜாலியான இளைஞரின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் விதமாக செல்லும் என்றும் இடைவேளை காட்சியின் போது அந்த இளைஞனின் பார்வை ஒரு சீரியஸான கட்டத்திற்குச் செல்ல அங்கே இருந்து சூடு பிடிக்கும் படம் இரண்டாம் பாதி முழுவதும் அனல் பறக்கும் ஆக்ஷன் காட்சிகளுடன் அதிரடி காட்டும் என இன்சைடு ரிப்போர்ட்டுகள் வெளியாகி உள்ளன.

5 கோடி செலவில் கிளைமேக்ஸ் ஃபைட்: இலங்கை ஹார்பரில் 5 கோடி ரூபாய் செலவில் பிரமாண்ட கிளைமேக்ஸ் சண்டைக் காட்சி உருவாக்கப்பட்டு இருக்கிறது. அந்த சீன் எல்லாம் ரசிகர்களை கூஸ்பம்ப்ஸ் ஆக்கிவிடும் என்கின்றனர். படத்தில் உள்ள 5 சண்டைக் காட்சிகளும் வித்தியாசமாகவும் ஆக்ஷன் லவ்வர்களை கவரும் விதத்திலும் உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அமரன் படத்தைத் தொடர்ந்து இந்த படத்திலும் சிவகார்த்திகேயன் தனது ஒட்டுமொத்த நடிப்பையும் ஆக்ஷன் காட்சிகளில் அதிரடியும் காட்டியுள்ளார் என்கின்றனர்.
கிளைமேக்ஸ் வசனம்: வித்யூத் ஜமால் உடன் நேருக்கு நேர் கிளைமேக்ஸில் சிவகார்த்திகேயன் பேசும் வசனம் எல்லாம் மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கும் என்றும் இருவருக்கும் இடையே நடைபெறும் சண்டைக் காட்சிகள் படத்தின் பெரும் பலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. என்டர்டெயின் விரும்பிகளுக்கு முதல் பாதியில் சிவகார்த்திகேயனின் ஃபன் அண்ட் ரொமாண்டிக் சைட் பக்காவான ட்ரீட்டாக இருக்கும் என்றும் மதராஸி படம் நிச்சயம் தமிழ் சினிமாவின் அடுத்த பிளாக்பஸ்டர் படமாக மாறும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications











