Madharaasi Ticket Booking: மாஸ் காட்டும் சிவகார்த்திகேயன்.. ஆரஞ்சு அலர்ட்டாக மாறிய மதராஸி புக்கிங்!
சென்னை: ரஜினிகாந்த், விஜய் மற்றும் அஜித் குமாரை தொடர்ந்து முன்கூட்டியே அட்வான்ஸ் டிக்கெட் புக்கிங்கை சிவகார்த்திகேயன் ஆரம்பித்த நிலையில், முதல் நாள் எல்லாம் மதராஸி படத்துக்கு போதிய வரவேற்பு இல்லாமல் இருந்தது. சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் கூட்டம் மிகக் குறைவு தானா? என சோஷியல் மீடியாவில் ட்ரோல்கள் பறந்தன.
இந்நிலையில், பிவிஆர் தியேட்டர்கள் உள்ளிட்ட மல்டிபிளக்ஸ் தியேட்டர் புக்கிங் தொடங்கியதும் கதையே மாறிவிட்டது. பல இடங்களில் 9 மணி சிறப்புக்காட்சி ஹவுஸ்ஃபுல்லாக மாறி வருகிறது.

மேலும், ஏகப்பட்ட தியேட்டர்களில் முதல் நாள் ஷோ முழுவதும் ஆரஞ்சு அலர்ட்டாக மாறி வருவதை புக் மை ஷோ மூலம் காண முடிகிறது.
தலைக்கனம் இல்லாத சிவகார்த்திகேயன்: அமரன் படத்தின் வெற்றிக்குப் பிறகு சிவகார்த்திகேயனை ரசிகர்கள் அடுத்த தளபதி, குட்டி தளபதி என்றெல்லாம் கொண்டாட ஆரம்பித்து விட்டனர். கோட் படத்தில் விஜய்க்காக கிளைமேக்ஸில் சிவகார்த்திகேயன் கேமியோ ரோலில் நடித்த நிலையில், அவரது கையில் விஜய் துப்பாக்கி கொடுத்ததும் தொடர்ந்து அண்ணன் அண்ணன் தான் தம்பி தம்பி தான் என தலைக்கனம் இல்லாமல் சிவகார்த்திகேயன் பேசி வருவதும் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு என அனைத்து நடிகர்களையும் மதித்து பேசுவது என தொடர்ந்து ரசிகர்களின் அன்பை அள்ளி வருகிறார்.
மாஸ் காட்டும் மதராஸி: ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ருக்மணி வசந்த், வித்யூத் ஜமால், பிஜு மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள மதராஸி படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் படங்களுக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். அட்வான்ஸ் புக்கிங்கிலேயே மதராஸி முதல் நாள் முழுவதும் அரங்கு நிறைந்த காட்சிகளாக மாறி வருவது மிகப்பெரிய ஓபனிங் வசூலை அந்த படத்துக்கு பெற்றுத்தரும் என்பதை உறுதிப்படுத்துகிறது.

ஆரஞ்சு அலர்ட்: சிவகார்த்திகேயனின் மதராஸி படத்தின் டிக்கெட் புக்கிங் தற்போது பல திரையரங்குகளில் 80 முதல் 90 சதவீதம் ஹவுஸ்ஃபுல் ஆகிவரும் நிலையில், ஆரஞ்சு அலர்ட்டாக தியேட்டர்களின் டிக்கெட் புக்கிங் நிலவரத்தை பார்க்க முடிகிறது. செப்டம்பர் 5ம் தேதி படம் வெளியாக உள்ள நிலையில், இன்று இரவுக்குள் பல தியேட்டர்கள் சிகப்பு நிறத்துக்கு மாறி ஹவுஸ்ஃபுல் போர்ட் மாட்டுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்போதே வின்னர் தான்: மதராஸி படத்துக்குப் போட்டியாக அனுஷ்காவின் காதி, கேபிஒய் பாலா ஹீரோவாக அறிமுகமாகும் காந்தி கண்ணாடி மற்றும் வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகி உள்ள பேட் கேர்ள் உள்ளிட்ட படங்கள் நாளை வெளியாகின்றன. ஆனால், மற்ற படங்களுக்கு மிகவும் குறைவான திரைகளே கிடைத்துள்ள நிலையிலும், அவை கூட ஹவுஸ்ஃபுல் ஆகாமல் பச்சை நிறத்திலேயே காட்சியளித்து வருவதால், இந்த வார பாக்ஸ் ஆபீஸ் வின்னர் இப்போதே சிவகார்த்திகேயன் தான் என்பது முடிவாகி விட்டது.
200 கோடி வசூல் வருமா?: இந்த ஆண்டு வெளியான படங்களில் கூலி படத்துக்கு அடுத்த இடத்தில் சிவகார்த்திகேயனின் மதராஸி படத்தின் வசூல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏ.ஆர். முருகதாஸ் இன்னொரு துப்பாக்கி படம் போல மதராஸி அமைந்து விட்டால் அது நிச்சயம் சாத்தியம் என்கின்றனர். சூர்யாவின் ரெட்ரோ, கமல்ஹாசனின் தக் லைஃப், பிரதீப் ரங்கநாதனின் டிராகன், விஜய் சேதுபதியின் தலைவன் தலைவி உள்ளிட்ட படங்களை விட அதிக வசூலை குவிக்குமா என்பது நாளை தெரிந்துவிடும்.


Click it and Unblock the Notifications











