Just In
- 1 min ago
என் வீட்டு கப்போர்டில் எலும்புக்கூடுகள் இல்லை.. நான் ஏன் பயப்பட வேண்டும்.. டாப்ஸி அதிரடி!
- 22 min ago
தங்கச் சிலையே தோற்றுப் போகும் அழகு…முன்னணி நடிகையை வர்ணிக்கும் ரசிகர்கள்!
- 35 min ago
தோட்டாக்களை தெறிக்க விட்டு தல அஜித்… துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்று சாதனை !
- 49 min ago
பெண்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும்…. அருண்பாண்டியன் சிறப்பு பேட்டி
Don't Miss!
- News
வேடசந்தூர் யாருக்கு? மல்லுக்கட்டும் காங்.- உதயசூரியன் சின்னம் வரைந்து பிரசாரத்தில் குதித்த திமுக
- Finance
ஆன்லைனில் எப்படி ஆதார் முகவரி மாற்றம் செய்வது..!
- Sports
பெண்களுக்கு உயிரை சுமக்கும் வாய்ப்பை கடவுள் கொடுக்க காரணம்... விராட் கோலி சிலிர்ப்பு
- Lifestyle
யாரெல்லாம் பேரீச்சை பழம் சாப்பிடக்கூடாது தெரியுமா? இந்த நேரத்தில் பேரீச்சை சாப்பிடுவது நல்லதல்ல...!
- Education
ரூ.45 ஆயிரம் ஊதியத்தில் இந்திய உச்ச நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு!
- Automobiles
சிஎன்ஜி வெர்சனில் தயாராகும் ஸ்கோடா ரேபிட் செடான் கார்!! சோதனையில் இருப்பதாக தகவல்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இந்த ஃபாரின் பிரபலத்துடன் மாதவன் என்ன பண்றாரு? இருக்கு ரசிகர்களுக்கு செம ட்ரீட் இருக்கு!
சென்னை: மாதவன் இயக்கி, நடித்து வரும் ராக்கெட்டரி படத்துக்காக ஒரு பாடலை பாட சர்வதேச பாடகியை களம் இறக்கியுள்ளார்.
இந்திய விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து, ராக்கெட்டரி என்ற படத்தை மாதவன் இயக்கி நடித்து வருகிறார்.
இந்த படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு பாடலை சர்வதேச பாடகி மேரி சாண்ட்லர் ஹிக்ஸ் பாடியுள்ளார்.
சும்மா ஸ்டைலா.. கோட் சூட்டில் ஷெரின்.. வைரலாகும் பிக்சர்ஸ் !

இயக்குநரான மாதவன்
இயக்குநர் ஆனந்த் மகாதேவன் இயக்கத்தில் மாதவன் நடிப்பில் நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாக இருந்தது. படம் ஆரம்பிக்கப்பட்ட சில வாரங்களிலேயே, ஆனந்த் மகாதேவன் இந்த படத்தை விட்டு வெளியேற, இயக்குநர் பொறுப்பையும், நடிகர் மாதவனே எடுத்துக் கொண்டு இந்த படத்தை இயக்கி, நடித்து வருகிறார்.

ஹீரோயின் யார்?
இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனாக மாதவன் நடித்து வரும் இந்த படத்தில், நீண்ட நாட்களுக்கு பிறகு, மாதவனுடன் நடிகை சிம்ரன் ஜோடியாக இணைந்து நடித்து வருகிறார். கன்னத்தில் முத்தமிட்டாள், பார்த்தாலே பரவசம் படங்களை தொடர்ந்து, மாதவன், சிம்ரன் காம்பினேஷனை இந்த படத்தில் ரசிகர்கள் பார்க்கலாம்.

சார்லி ரீமேக்
ராக்கெட்டரி படத்தை தொடர்ந்து, மலையாளத்தில் துல்கர் சல்மான், பார்வதி நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த, சார்லி படத்தை தமிழில் ரீமேக் செய்து நடிக்க உள்ளார் மாதவன். மாறா என தலைப்பு வைக்கப்பட்டுள்ள அந்த படத்தில், விக்ரம் வேதா படத்தில், மாதவனுக்கு ஜோடியாக நடித்த ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஜோடியாக நடிக்கிறார். அறிமுக இயக்குநர் திலீப் குமார் இயக்குகிறார்.

ஃபாரின் சிங்கர்
விக்ரம் வேதா படத்தைத் தொடர்ந்து, மாதவனின் ராக்கெட்டரி படத்துக்கு, இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில், இடம்பெற்றுள்ள ஒரு பாடலை சர்வதேச பாடகி, மேரி சாண்ட்லர் ஹிக்ஸ் பாடியுள்ளார். அதுகுறித்த தகவலுடன், அந்த பாடகியுடன் எடுத்த புகைப்படத்தை மாதவன் ஷேர் செய்துள்ளார்.

சூர்யா, ஷாருக்
இந்திய திரையுலகில் பல பிரபலங்களுடன் நெருங்கிய நட்புக் கொண்டவர் நடிகர் மாதவன். மாதவன் இயக்கத்தில் உருவாகி வரும் ராக்கெட்டரி படத்தில், சிறப்பு தோற்றத்தில், சூர்யா மற்றும் ஷாருக் கான் நடித்துள்ளனர். விரைவில் ராக்கெட்டரி திரைப்படத்தை திரைக்கு கொண்டு வரும் முயற்சியில் மாதவன் உழைத்து வருகிறார்.