»   »  மீண்டும் கமலுடன் "மேடி"... தூங்காவனத்தில்... கொடூர வில்லனாக?

மீண்டும் கமலுடன் "மேடி"... தூங்காவனத்தில்... கொடூர வில்லனாக?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கமலின் தூங்காவனம் படத்தில் மாதவன் கொடூர வில்லனாக நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

'உத்தம வில்லன்' படத்தைத் தொடர்ந்து கமல்ஹாசன் தன்னிடம் இணை இயக்குநராக பணியாற்றிய ராஜேஷ் இயக்கத்தில் நடித்து வருகிறார். த்ரிஷா, பிரகாஷ்ராஜ், யூகி சேது, ஆஷா சரத், மதுஷாலினி உள்ளிட்ட பலர் கமலுடன் நடித்து வருகிறார்கள்.


'தூங்காவனம்' எனப் பெயரிடப்பட்டு இருக்கும் இப்படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வந்தது.


இந்தப் படத்தில் வில்லனாக மாதவன் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது.


கமல், மாதவன் ஜோடி...

கமல், மாதவன் ஜோடி...

ஏற்கனவே, கமலுடன் அன்பே சிவம், மன்மத அம்பு உள்ளிட்ட படங்களில் சேர்ந்து நடித்தவர் மாதவன். இது தவிர கமல் தயாரித்த நளதமயந்தி படத்தில் மாதவன் தான் ஹீரோ.


தூங்காவனம்...

தூங்காவனம்...

இந்நிலையில் தூங்காவனம் படத்திலும் கமலுடன் மாதவன் சேர்ந்து நடித்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்தத் தகவலை படக்குழு ரகசியமாக வைத்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


கொடூர வில்லன்...

கொடூர வில்லன்...

மற்ற படங்கள் போல், இப்படத்தில் கமலுடன் மற்றொரு நாயகனாக நடிக்காமல் வில்லனாக நடிக்கிறாராம் மாதவன். அதுவும் பெரிய இடத்துப் பிள்ளைகளைக் கடத்திக் கொலை செய்யும் கொடூர வில்லன் வேடமாம்.


வில்லனாகும் ஹீரோக்கள்...

வில்லனாகும் ஹீரோக்கள்...

சமீபகாலமாக முன்னணி நாயகர்களின் படங்களில் பிரபலமான மற்ற ஹீரோக்களே வில்லன்களாக நடித்து வருகின்றனர். என்னை அறிந்தால் படத்தில் அஜீத்துக்கு வில்லனாக அருண் விஜய் நடித்தார். அதேபோல், அனேகன் படத்தில் தனுஷிற்கு வில்லனாக கார்த்திக் நடித்திருந்தார்.


ரஜினி வில்லனாக விக்ரம்...

ரஜினி வில்லனாக விக்ரம்...

ஷங்கரின் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ள எந்திரன் - 2ம் பாகத்தில் வில்லனாக விக்ரம் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. அந்த வகையில், கமலின் படத்தில் மாதவன் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


கமல் அப்செட்...

கமல் அப்செட்...

ஆனால், படு ரகசியமாக வைக்கப் பட்டிருந்த இந்த விஷயம் மீடியாக்களில் லீக் ஆனதால் கமல் அப்செட் ஆனதாகக் கூறப்படுகிறது. ஆனால், கமல் படத்தில் மாதவன் நடிக்கவில்லை என்றும், இது வெறும் வதந்தி என்றும் சிலர் கூறுகின்றனர்.


எப்படியோ, கத்தரிக்காய் முத்தினா கடைத்தெருவுக்கு வந்து தானே ஆகணும்... வில்லத்தனம் செஞ்சா வெளியில் தெரிஞ்சுதானே ஆகனும்!English summary
sources said that actor Madhavan is doing a negative role in Kamal's Thongavanan film.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil