twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தென்னிந்திய ஹிட் படங்கள் லிஸ்ட்...சிக்கலில் மாட்டிய மாதவன்...இப்படியா போய் சிக்குவாரு?

    |

    சென்னை : நடிகர் மாதவன் இந்தியாவின் பல மொழிகளிலும் பிரபலமான நடிகராக உள்ளார். இவர் நடித்த ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட் படம் சமீபத்தில் ரிலீசாகி பாசிடிவ் விமர்சனங்களை பெற்றது.

    இதைத் தொடர்ந்து மாதவன் இந்தியில் நடித்து வரும் 'Dhokha - Round D Corner'படத்தின் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த விழாவில் கலந்து கொண்ட மாதவனிடம், நீங்கள் ரீமேக் படங்கள் எடுப்பீர்களா என கேள்வி எழுப்பப்பட்டது.

    சமீப காலமாக பாலிவுட்டில் எடுக்கப்படும் ரீமேக் படங்கள் மட்டுமின்றி, பல படங்களும் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்து வருகின்றன. அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களும் தோல்வி அடைவதால் பாலிவுட்டே அதிர்ச்சியில் உள்ளது.

    மினி ஆச்சி ஆன 'பருத்திவீரன் 'சுஜாதா.. விருமாண்டியில் கமல் இவரை எப்படி அறிமுகப்படுத்தினார் தெரியுமா? மினி ஆச்சி ஆன 'பருத்திவீரன் 'சுஜாதா.. விருமாண்டியில் கமல் இவரை எப்படி அறிமுகப்படுத்தினார் தெரியுமா?

    ரீமேக் செய்ய மாட்டேன்

    ரீமேக் செய்ய மாட்டேன்

    இந்த சமயத்தில் ரீமேக் படங்கள் பற்றி மாதவன் தெரிவித்துள்ள பதில், அவருக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. மாதவன் கூறுகையில், நான் எனது படங்களை எந்த வகையிலும் ரீமேக் செய்ய மாட்டேன். 3 இடியட்ஸ் படத்தை தமிழில் ரீமேக் செய்யும் படி என்னிடம் கேட்கப்பட்டது. நான் அதை செய்யவில்லை. ஒரு நடிகராக அது எனக்கு கஷ்டம்.

    எனக்கு அது கஷ்டம்

    எனக்கு அது கஷ்டம்

    ஒரு நடிகராக ஒரு சீனை முதலில் செய்வது என்பது ஓகே. ஆனால் அதையே ரீ க்ரியேட் செய்வது என்பது என்னால் முடியாதது. ரீமேக் செய்யும் போது ஒரிஜினல் படத்துடனான ஒப்பீடு இருக்கும். இது கிண்டல் கேலிக்கே வலி வகுக்கும் என்றார்.

    தென்னிந்திய ஹிட் படங்கள்

    தென்னிந்திய ஹிட் படங்கள்

    தென்னிந்திய படங்கள் ஹிட் ஆகி வரும் நிலையில் பாலிவுட் படங்கள் தொடர்ந்து படுதோல்வி அடைந்து வருவது பற்றி மாதவனிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த மாதவன், படம் நல்லா இருந்தால் மக்கள் தியேட்டருக்கு படம் பார்க்க வருவார்கள். தென்னிந்திய படங்கள் அதை நன்றாக செய்கின்றன. இன்னும் தெளிவாக சொல்ல போனால் பாகுபலி, பாகுபலி 2, ஆர்ஆர்ஆர், புஷ்பா, கேஜிஎஃப், கேஜிஎஃப் 2 ஆகிய தென்னிந்திய படங்கள் மட்டுமே இந்தி நடிகர்கள் படங்களை விட சிறப்பாக ரசிகர்களை கவர்ந்துள்ளன என்றார்.

    மக்களின் சிந்தனை மாறி உள்ளது

    மக்களின் சிந்தனை மாறி உள்ளது

    கொரோனாவிற்கு பிறகு மக்களின் சிந்தனைகள், ரசனைகள் மாறி உள்ளன. ஏனென்றால் அவர்கள் உலகம் முழுவதும் இருந்து கன்டென்ட் பெறுகிறார்கள். நாமும் அதே போல் படம் எடுத்தால் அது ரசிகர்களை விரும்ப வைக்கும். மக்கள் பார்ப்பார்கள். அது போன்ற படங்களை நாமும் எடுக்க முயற்சி செய்தால் முன்னேற்றம் ஏற்படும் என்றார் மாதவன்.

    இப்படியா சிக்குவாரு

    இப்படியா சிக்குவாரு

    இந்த பேட்டியை பார்த்த நெட்டிசன்கள், தென்னிந்தியாவில் ஹிட் படங்களாக இந்த 6 படங்கள் மட்டும் தான் மாதவன் கண்ணுக்கு தெரிந்ததா? தமிழில் ஒரு படம் கூட ஹிட் ஆகவில்லையா? ஜெய்பீம், விக்ரம் போன்ற படங்கள் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களால் விரும்பப்படவில்லையா? இவரின் ராக்கெட்ரி படம் ஓடுவதற்காக மட்டும் தமிழ் திரையுலகம் தேவைப்பட்டது.ஆனால் ஹிட் படங்கள் லிஸ்ட் என்றால் தவறி கூட தமிழ் படங்கள் ஒன்றை கூட சொல்ல இவருக்கு தோன்றவில்லையா என மாதவனை கண்டபடி வறுத்தெடுத்து வருகின்றனர்.

    English summary
    Madhvan said, "If the film is good, public will come to the theatres. When we talk about South films that have done well, let me tell you clearly that Bahubali 1, Bahubali 2, RRR, Pushpa, KGF 1 and 2, are the only south Indian films that have done better than movies of Hindi film actors.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X