»   »  சற்குணத்துடன் இணையும் மாதவன்

சற்குணத்துடன் இணையும் மாதவன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

இறுதிச் சுற்று தந்த வெற்றியைத் தக்க வைத்துக்கொள்வதில் மும்முரமாக இருக்கிறார் மாதவன்.

அடுத்து இயக்குநர் விஜய் இயக்கத்தில் சார்லி ரீமேக்கில் நடிக்கும் அவர் அந்த படத்தின் கெட்டப்புக்காக இப்போது எடையைக் குறைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். இது மலையாளத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான படம்.

Madhavan to join with Sargunam

சார்லியைத் தொடர்ந்து யாருடன் இணைவார் என அனைவரும் எதிர்பார்த்தார்கள். அதற்கு ஒரு ஆச்சர்யம் பதிலாக கிடைத்திருக்கிறது. மாதவன் அடுத்து நடிக்கவிருப்பது சற்குணம் இயக்கத்தில்.

சற்குணம் தஞ்சை கிராமங்களை மையமாக வைத்து தான் கதை அமைப்பார். இதுவரை மாதவன் கிராமத்து வேடங்களில் நடித்ததில்லை. எனவே இந்த காம்பினேஷனே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

English summary
Madhavan is next joining with Kalavani fame Sargunam.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil