twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஒலிம்பிற்கு தேர்வான நீச்சல் வீரர்... பாராட்டிய மாதவன்

    |

    டெல்லி : 2021 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க இந்தியா சார்பில் முதல் ஆளாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் சஜன் பிரகாஷ். ரோமில் நடந்த Sette Colli Trophy நீச்சல் போட்டியில் ஆண்களுக்கான 200 மீட்டர் பட்டர்ஃப்ளை பிரிவில் ஒரு மணி நேரம் 56 நிமிடம் 38 விநாடிகளில் போட்டி இலக்கை அடைந்துள்ளார்.

    இதனையடுத்து சர்வதேச நீச்சல் போட்டியில் டாப் இடத்திற்கு சென்றுள்ளார் சஜன் பிரகாஷ். இந்திய விளையாட்டு துறை வரலாற்றிலேயே ஏ பிரிவு கோட்டாவில் தகுதிபெற்ற முதல் இந்திய வீரர் இவர் தான்.

    இந்தியாவிற்கு பெருமை சேர்த்த சஜன்

    இந்தியாவிற்கு பெருமை சேர்த்த சஜன்

    இதன் மூலம் முதல் ஆளாக ஓலிம்பிக் போட்டிக்கு இந்தியா சார்பில் சஜன் தேர்வாகி உள்ளார். இதனையடுத்து மத்திய இளைஞர் நலத்துறை அமைச்சர் கிரன் ரிஜிஜு உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இது இந்தியாவிற்கு கிடைத்த பெருமை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

    சஜனை வாழ்த்திய மாதவன்

    சஜனை வாழ்த்திய மாதவன்

    இந்நிலையில் நடிகர் மாதவனும் சஜனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மாதவனின் மகன் வேதாந்த்தும் சர்வதேச லெவல் நீச்சல் வீரர் ஆவார். மாதவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ரோமில் திறமையாக நீந்திய சஜன் பிரகாஷிற்கு வாழ்த்துக்கள்.

    ஜப்பானிலும் கலக்குங்கள்

    ஜப்பானிலும் கலக்குங்கள்

    குறுகிய நேரத்தில் நீந்தி, 2021 ஒலிம்பிற்காக தேர்வாகி உள்ளீர்கள். நாங்கள் மிக த்ரில்லாகவும், பெருமையாகவும் உணர்கிறோம். இதே போல் ஜப்பானிலும் கலக்குங்கள். இந்திய நீச்சல் கழகத்திற்கும் வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார்.

    சஜன் ஃபோட்டோவை பகிர்ந்த மாதவன்

    சஜன் ஃபோட்டோவை பகிர்ந்த மாதவன்

    சஜன் பிகாஷின் ஃபோட்டோவையும் அவரின் பயிற்சியாளர் ஃபோட்டோவையும் மாதவன் பகிர்ந்துள்ளார். சஜன் பிகாஷ், கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார்.

    English summary
    Maddy congratulated and shared a photo of Sajan Prakash with his coach.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X