»   »  மோடி அரசு புறக்கணித்த கனடா பிரதமரை சந்தித்த ஒரே தமிழ் நடிகர் மாதவன்

மோடி அரசு புறக்கணித்த கனடா பிரதமரை சந்தித்த ஒரே தமிழ் நடிகர் மாதவன்

Posted By:
Subscribe to Oneindia Tamil
இந்தியா வந்துள்ள கனடா பிரதமர்-வீடியோ

மும்பை: மோடி அரசு கண்டுகொள்ளாத கனடா பிரதமரை நம்ம நடிகர் மாதவன் சந்தித்து பேசியுள்ளார்.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது குடும்பத்தாருடன் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். 17ம் தேதி இந்தியா வந்த அவர் ஒரு வாரம் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

ட்ரூடோ மற்றும் அவரது குடும்பத்தாரை மோடி தலைமையிலான மத்திய அரசு கண்டுகொள்ளவே இல்லை.

சபர்மதி ஆசிரமம்

சபர்மதி ஆசிரமம்

காதல் சின்னமான தாஜ்மஹால், மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமம் ஆகியவற்றுக்கு குடும்பத்தோடு சென்றார் ட்ரூடோ. இந்திய பாரம்பரிய உடை அணிந்து ஊர் சுற்றும் ட்ரூடோ குடும்பத்தாருக்கு சமூக வலைதளங்களில் அமோக ஆதரவு கிடைத்துள்ளது.

செல்லங்கள்

செல்லங்கள்

ட்ரூடோவின் மகள், இரண்டு மகன்கள் இந்திய உடை அணிந்து அழகாக வணக்கம் சொல்லும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.

ஷாருக்கான்

ஷாருக்கான்

மும்பையில் பெரிய தொழில் அதிபர்கள், பாலிவுட் பிரபலங்கள் ட்ரூடோவை சந்தித்து பேசினார்கள். நடிகர்கள் ஷாருக்கான், ஆமீர் கான், அனுபம் கேர், ஃபர்ஹான் அக்தர் உள்ளிட்டோர் ட்ரூடோவை சந்தித்தனர்.

ட்ரூடோ

ட்ரூடோ

ட்ரூடோ பொங்கல் பண்டிகைக்கு தமிழில் ட்வீட்டி வாழ்த்து தெரிவித்தார். மேலும் பட்டு வேட்டி சட்டை அணிந்து தமிழர்களுடன் சேர்ந்து பண்டிகையை கொண்டாடினார். இதனால் தமிழக மக்களின் மனம் கவர்ந்த பிரதமராகிவிட்டார் ட்ரூடோ. மோடி ட்ரூடோவை கண்டுகொள்ளாதது தமிழக மக்களை அதிருப்தி அடைய வைத்துள்ளது.

சந்திப்பு

ட்ரூடோவை சந்திக்க தமிழக மக்கள் ஆவலாக இருந்தாலும் நடிகர் மாதவனுக்கு தான் அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. மும்பையில் நடந்த விருந்தில் ட்ரூடோவுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை மாதவன் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

English summary
Actor Madhavan tweeted that, 'JustinTrudeau such a pleasure and honour meeting you sir. Your relatability, grace and charm was most endearing and its easy to see why you are the Pride and toast of Canada.Have a lovely rest of the tour.'

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil